Tata Sierra: டாடா நிறுவனத்தின் புதிய சியாரா கார் மாடல், பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் என மூன்று வகையான எரிபொருள் ஆப்ஷன்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.

Continues below advertisement

டாடா சியாரா கார் மாடல்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2030ம் ஆண்டிற்குள், 7 புதிய கார் மாடல்களை சந்தைப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் முதலாவதாக முற்றிலும் புதிய டாடா சியாரா கார் மாடல் அமைந்துள்ளது. இதுதொடர்பான ஏராளமான தகவல்கள் ஏற்கனவே வெளியாகி, கார் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிட்சைஸ் எஸ்யுவி செக்மெண்டில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த காரானது, ஹுண்டாய் க்ரேட்டா, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி விக்டோரிஸ், மாருதி க்ராண்ட் விட்டாரா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிட உள்ளது. 

ஆச்சரியப்படுத்தும் விதமாக, டாடா நிறுவனம் ஒரே அடியாக பல்வேறு பவர்-ட்ரெயின் விருப்பங்களில் சியாராவை விற்பனைக்கு கொண்டு வருகிறது. நேட்சுரலில் ஆஸ்பிரேடட் பெட்ரோல், டர்போ சார்ஜ்ட் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் என நான்கு எரிபொருள் ஆப்ஷன்களில் பட்டியலிடப்பட உள்ளது.

Continues below advertisement

டாடா சியாரா - அறிமுகம் எப்போது?

டாடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சியாரா காரின் அறிமுக தேதி என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் வெளியாகியுள்ள தகவல்களின்படி, இன்ஜின் அடிப்படையிலான எடிஷன்கள் வரும் நவம்பர் மாதத்திலும், மின்சார எடிஷன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும் சந்தைப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. 

டாடா சியாரா - இன்ஜின் ஆப்ஷன்கள்

இன்ஜின் தொடர்பான விரிவான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், சியரா ஆரம்பத்தில் புதிய 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் பெறும் என்றும், பின்னர் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் யூனிட் எண்ட்ரி லெவல் வேரியண்ட்களில் வழங்கப்படுவதால், இந்த எஸ்யூவியை போட்டித்தன்மை மிக்க விலையில் வழங்க டாடாவிற்கு வாய்ப்பு கிடைக்கிறது.

டாப் எண்ட் வேரியண்ட்களில் 1.5 லிட்டர் TGDi நேரடி டைரக்ட் இன்ஜெக்‌ஷன் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும். இது 5,000rpm இல் அதிகபட்சமாக 170bhp பவரையும், 2,000rpm - 3,500rpm இடையே 280Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும். இரண்டு பெட்ரோல் இன்ஜின்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கும். சியரா டீசல் மாடல் 2.0 லிட்டர் க்ரையோடெக் இன்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

டாடா சியாரா - பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்

சியாரா மின்சார SUV-க்கான பேட்டரியானது ஹாரியர் EV யிலிருந்து, 65kWh மற்றும் 75kWh என இரண்டு ஆப்ஷன்களாக (QWD அல்லது AWD வகைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது) பின்பற்றப்படலாம். அதிலிருப்பதை போலவே, சியரா EV யும் AWD (ஆல்-வீல் டிரைவ்) அமைப்புடன் வரும் என்றும், முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீக்கு மேல் ரேஞ்சை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI