இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் டாடாவின் புதிய சியாரா காரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டாடா சியாரா காரில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை காணலாம்

Continues below advertisement

 நியூ ஜென் சியாரா: 

டாடா மோட்டார்ஸ் தனது நீண்டநாள் எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைமுறை டாடா சியராவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 4 மீட்டர் ப்ளஸ் SUV பிரிவில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி, கிராண்டு விடாரா போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாக வரும். இந்த SUV, 4.3 மீ நீளத்துடன் பிரிவுக்கு ஏற்ப சரியான வடிவத்தில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. அசல் சியராவை நினைவூட்டும் ரெட்ரோ–மாடர்ன் ஸ்டைலிங், 19-இன்ச் அலாய் வீல்கள், கூர்மையான புதிய லைன்கள் போன்ற அம்சங்களுடன்  மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய 3-டோர் வடிவமைப்பை விட்டுவிட்டு, புதிய சியரா தற்போது முழுமையான 4-டோர், 5-சீட்டர் SUV ஆக வந்துள்ளது.

Continues below advertisement

என்ஜின் மற்றும் பவர்டிரெய்ன்

புதிய சியராவின் பவர்டிரெயின்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இது 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, 170 bhp சக்தி மற்றும் 280 Nm டோர்க் வழங்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டர்போ பெட்ரோல் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வரும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் தொடரும் வாய்ப்பு உள்ளது. ICE மாடல் FWD (Front Wheel Drive) முறையில் மட்டும் கிடைக்கும்; AWD/RWD விருப்பங்கள் வழங்கப்படவில்லை.

விலை:

டர்போ-பெட்ரோல் வேரியண்டின் விலை ரூ.15 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டீசல் மாடல் தோராயமாக ரூ.13 லட்சத்தில் தொடங்கக் கூடும். இந்த விலை நிர்ணயமானது அந்த பிரிவில் உள்ள போட்டியாளர்களுடன் பரவலாக ஒத்துப்போகிறது. 

வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்

புதிய சியராவில் பல உயர்தர பிரீமியம் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பனோரமிக் சன்ரூஃப், எலக்ட்ரானிக் பார்கிங் பிரேக், 360-டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, காற்றோட்டமான முன் இருக்கைகள், லெவல்-2 ADAS பாதுகாப்பு அமைப்பு, மூன்று டிஸ்ப்ளே ஸ்கிரீன்கள், டால்பி அட்மோஸ் ஆடியோ அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்கள். எனவே, இந்த பிரிவில் பயனர்களின் வசதியையும், பாதுகாப்பையும் அதிகரிக்கும் வகையில் சியரா வடிவமைக்கப்பட்டுள்ளது.

போட்டி மாடல்கள்

புதிய சியரா சந்தையில் அறிமுகமாவது, க்ரெட்டா–செல்டோஸுக்கு போட்டியை மேலும் கடுமையாக்கும். ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்டு விக்டாரா, MG அஸ்டர், டொயோட்டா ஹைரைடர் போன்ற மாடல்களுடன் சியரா நேரடியாக மோதும். முதலில் ICE பதிப்பாக அறிமுகமாகும் சியரா, பின்னர் EV உட்பட பல பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் வரக்கூடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI