டாடா நிறுவனம், அதன் பிரபலமான சியரா எஸ்யூவி-யின் EV பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஒற்றை RWD மாடலை விட, QWD (Quad Wheel Drive) மாடல் வாங்குவதற்கு உகந்ததா என்பதைப் பற்றி இப்போது அலசுவோம். QWD இரட்டை மோட்டார் மாடல்தான் சியரா EV-களிலேயே மிகவும் விலை உயர்ந்தது. இதன் விலை 26 லட்சம் ரூபாய் ஆகும். இது, 75 kWh பேட்டரி பேக்குடன் வரும் மிகவும் விலை உயர்ந்த RWD ஒற்றை மோட்டார் மாடலை விட ஒரு லட்சத்திற்கும் மேல் அதிகமாகும்.

Continues below advertisement

செயல்திறன் மற்றும் வரம்பு ஒப்பீடு

QWD ஒரு பிரத்யேக வண்ணத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது RWD-ஐ (Rear Wheel Drive) விட நிச்சயமாக மிகவும் வேகமானது மற்றும் அதிக திறன் வாய்ந்தது. 500Nm-க்கும் அதிகமான மற்றும் 300Ps சக்தியுடன், QWD ஆனது, மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 6 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் எட்டிவிடுகிறது. RWD 75kwh பேட்டரி பேக் 209hp என்ற குறைவான சக்தியையே கொண்டுள்ளது.

Continues below advertisement

சுவாரஸ்யமாக, RWD 63kwh பேட்டரி பேக் பதிப்பானது, 75kwh பேட்டரி பேக் பதிப்பை விட சற்றே அதிக சக்தியான 238hp-ஐ வழங்குகிறது.

ரேஞ்ச் விஷயத்தில், சிங்கிள் மோட்டார் RWD 75kwh பேட்டரி பேக் 665 கி.மீ. தூரம் செல்லும் திறன் கொண்டது. அதே சமயம், டூயல் மோட்டார் கொண்ட பதிப்பு 624 கி.மீ. தூரம் மட்டுமே செல்கிறது.

எந்தப் பதிப்பு அதிக பொருத்தமாக இருக்கிறது.?

RWD 75kwh பேட்டரி பேக் அதிக தூரம் பயணிக்கும் திறனை வழங்கினாலும், குறைவான சக்தியையே அளிக்கிறது. அதே சமயம், செயல்திறனை விரும்புபவர்கள் QWD மாடலை தேர்ந்தெடுக்கலாம்.

இறுதியில், இது விலையையும் சார்ந்த ஒரு விஷயமாகும். ஏனெனில், டூயல் மோட்டார் என்பது சியராவின் ஒரு வேரியன்ட் மட்டுமே. அதுவே மிகவும் விலை உயர்ந்ததும் கூட. ஆனாலும், இந்தியாவின் அதிவேகமான மின்சார வாகனம் என்ற பெருமையை அது பெறுகிறது. டூயல் மோட்டார் வெர்ஷனுடன் ஒப்பிடும்போது, ​​அதிக ரேஞ்ச் கொண்ட 75 kWh பேட்டரி பேக்குடன் கூடிய சிங்கிள் மோட்டார் வெர்ஷன் மிகவும் விவேகமானதாக இருக்கலாம்.

சியரா இவி-யின் சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, டாடா சியரா EV மிகவும் ப்ரீமியம் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் முன் இருக்கைப் பயணிக்கான தனி டிஸ்ப்ளே ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று திரை அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், இது பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்ட வசதி மற்றும் பவர் சீட்கள், ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI