சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான நேற்று சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்த நிலையில், இன்று 1,280 ரூபாய் குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

Continues below advertisement

தங்கத்தின் மீதான முதலீடு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக முதலீட்டாளர்களின் பார்வை கச்சா எண்ணெய் மீது திரும்பியது. இதனால் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு அதிகரித்தால் தங்கத்தின் மீதான விலையானது குறைந்தது.  இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக மீண்டும் தங்கத்தின் விலையானது உயர தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒரே நாளில் சவரனுக்கு 2500 ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலையானது உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.  

தங்கம் விலை நிலவரம்

  • ஜூலை 1-ம் தேதி  காலையில் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கும், மாலையில்  சவரனுக்கு 1200 ரூபாய் உயர்ந்து  1,06,000 ரூபாய்க்கு விற்பனையானது.
  • ஜூலை 2-ம் தேதி காலையில் தங்கம் கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 1,07,200 ரூபாய்க்கும் விற்பனை. மாலையில் மீண்டும் விலை உயர்ந்து கிராமிற்கு 150 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,550 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் விலை உயர்ந்தது 1,08,400 ரூபாய்க்கும் விற்பனை.
  • ஜூலை 3-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து 13,700 ரூபாய்க்கும், சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து  1,09,600 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 4-ம் தேதி மாற்றமில்லை.
  • ஜூலை 5-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை.
  • ஜூலை 6-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் குறைந்து 13,560 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து  1,08,480 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கம் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில், கிராம் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 13,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 1,07,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Continues below advertisement

வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கத்தைப் போல், வெள்ளி விலையும் ஏறி இறங்கி வரும் நிலையில், நேற்று கிராமிற்கு 10 ரூபாய் குறைந்தது. ஆனால், இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி, கிராம் ஒன்று 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.