Tata Sierra EV Price List: டாடா சியாரா மின்சார கார் மாடலின் பேட்டரிக்கு வாழ்நாள் முழுவதும் வாரண்டி உண்மையா? என்ற விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

டாடா சியாரா மின்சார கார்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா சியாரா மின்சார எடிஷனானது 18 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் என்ற தொடக்க விலையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பேட்டரி பேக்குகளில் ரியர் வீல் ட்ரைவ் மற்றும் ஆல் வீல் ட்ரைவ் கான்ஃபிகரேஷனில் பயனர்களுக்கு கிடைக்கிறது. பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 665 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், வரும் 15ம் தேதி முதல் விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட்கள் மற்றும் அவற்றின் விலை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

சியாரா EV விலை விவரங்கள்:

சியாரா காரானது 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 63KWh மற்றும் 75 KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் வாடிக்கையாளர்கள் வேரியண்ட்களை தேர்வு செய்யலாம். டாப் வேரியண்டில் டாடாவின் க்வாட் வீல் ட்ரைவ் ஆப்ஷனும் கிடைக்கப்பெறுகிறது.

வேரியண்ட்63KWh75 KWh (RWD)75 KWh (AWD)
Pureரூ.18.79 லட்சம்--
Pure Sரூ.19.99 லட்சம்--
அட்வென்சர்ரூ.20.99 லட்சம்ரூ.22.19 லட்சம்-
எம்பவர்ட்ரூ.22.79 லட்சம்ரூ.23.79 லட்சம்-
எம்பவர்ட் A-ரூ.24.79 லட்சம்ரூ.25.99 லட்சம்

சியாரா EV - பேட்டரி விவரங்கள்

 63kWh பேட்டரி பேக்கானது 238PS மற்றும் 315Nm ஆற்றலை உற்பத்தி செய்து 565 கி.மீ. வரையிலான ரேஞ்சை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய 75kWh பேட்டரியானது 238PS மற்றும் 315Nm ஆற்றலை உற்பத்தி செய்வதுடன், ரியர்-வீல்-ட்ரைவ் மாடலில் 665 கி.மீ. ரேஞ்சை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, டாடா நிறுவனம் 75kWh இரட்டை மோட்டார் கொண்ட AWD வேரியன்ட்டையும் வழங்குகிறது. இது 349PS பவரையும், 504Nm டார்க்கையும் உருவாக்குவதோடு, 624 கி.மீ.ரேஞ்சை அளிக்கிறது. DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, பேட்டரியை வெறும் 26 நிமிடங்களில் 20% முதல் 80% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Tata Sierra EV Vs Rivals: சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு

பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?

சியாரா மின்சார எடிஷனின் அறிமுகத்தின் போது, பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்டி என்ற டாடாவின் அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், அந்த அறிவிப்பின் பின் பல நிபந்தனைகள் இருப்பதை கவனிக்க வேண்டும். அதன்படி, இந்த உத்தரவாதம் வாகனத்தின் முழு ஆயுட்காலத்திற்கும் செல்லுபடியாகாது. காரணம் டாடா நிறுவனம் 'ஆயுட்காலம்' என்பதை முதல்முறையாக வாகனம் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 15 ஆண்டுகள் என வரையறுக்கிறது, மேலும் இது வாகனத்தின் முதல் உரிமையாளருக்கு மட்டுமே பொருந்தும். இந்த உத்தரவாதம் 63kWh மற்றும் 75kWh பேட்டரி பேக்குகள் இரண்டையும் உள்ளடக்கியது,  நுணுக்கமான விதிமுறைகள் இருந்தபோதிலும், இந்த உத்தரவாதமானது இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் மிகவும் தாராளமான பேட்டரி பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 

சியாரா EV - வண்ண விருப்பங்கள்:

டாடா சியாரா மின்சார எடிஷனானது மொத்தம் 7 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதில் ப்ரிஷ்டைன் ஒய்ட், ப்யூர் க்ரே, கூர்க் க்ளவுட், பெங்கால் ரோக், அந்தமான் அட்வென்சர், ரிஷிகேஷ் ரேபிட்ஸ் மற்றும் நைனிடல் நாக்டர்ன் ஆகியவை அடங்கும். வண்ணத்திற்கேற்ப காரின் விலையும் சற்றே மாறுபடக்கூடும்.


Car loan Information:

Calculate Car Loan EMI