Tata Sierra EV Vs Rivals: டாடா சியாரா மின்சார காரின் முழு விவரங்களும் கீழே விளப்பட்டுள்ளன.
டாடா சியாரா EV Vs போட்டியாளர்கள்:
டாடா சியாராவின் இன்ஜின் எடிஷன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதன் மின்சார எடிஷன் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மிகவும் போட்டித்தன்மை மிக்க எஸ்யுவி செக்மெண்டில் 18 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் என்ற தொடக்க விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது மஹிந்த்ராவின் BE 6, ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக், மாருதி சுசூகி எ விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா, MG ZS EV மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்6 ஆகியவற்றிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது. இந்த வாகனங்களானது டிசைன், அம்சங்கள், செயல்திறன், விலை, பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் என பயனர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு அம்சங்களிலும் வேறுபட்டு காணப்படுகின்றன. அவற்றை டாடா சியாரா மின்சார எடிஷன் எப்படி எதிர்கொள்கிறது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சியாரா EV Vs போட்டியாளர்கள் - விலை ஒப்பீடு
சியாரா மின்சார எடிஷனின் விலையானது 18 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 25 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. இதன் மூலம் க்ரேட்டா எலெக்ட்ரிக், இ விட்டாரா, எபெல்லா, MG ZS EV மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்6 ஆகியவற்றை விட மேலேயும், மஹிந்த்ராவின் BE 6 டாப் வேரியண்டை காட்டிலும் கீழும் விலை வரம்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| கார் மாடல்கள் | விலை வரம்பு (எக்ஸ் - ஷோரூம்) |
| டாடா சியாரா | ரூ.18.79 லட்சம் - ரூ.25.99 லட்சம் |
| மஹிந்த்ராவின் BE 6 | ரூ.18.90 லட்சம் - ரூ.28.49 லட்சம் |
| ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக் | ரூ.18.03 லட்சம் - ரூ.24.55 லட்சம் |
| மாருதி சுசூகி இ விட்டாரா | ரூ.15.99 லட்சம் - ரூ.19.99 லட்சம் |
| டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா | டாப் வேரியண்டின் விலை ரூ.23.80 லட்சம் |
| MG ZS EV | ரூ.17.99 லட்சம் - ரூ.20.75 லட்சம் |
| வின்ஃபாஸ்ட் விஎஃப்6 | ரூ.17.29 லட்சம் - ரூ.19.19 லட்சம் |
எபெல்லாவின் மற்ற வேரியண்ட்களின் விலையை டொடோட்டா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சியாரா EV Vs போட்டியாளர்கள் - பேட்டரி பேக் ஒப்பீடு
சியாரா மின்சார எடிஷனின் 63KWh மற்றும் 75KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் நேரடி போட்டியாளர்களில் மஹிந்த்ராவின் BE 6 மட்டுமே பெரிய 79KWh என்ற பேட்டரி பேக்கை கொண்டுள்ளது.
| கார் மாடல்கள் | பேட்டரி பேக் ஆப்ஷன்கள் |
| டாடா சியாரா | 63KWh, 75KWh |
| மஹிந்த்ராவின் BE 6 | 59KWh, 79KWh |
| ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக் | 42KWh, 51.4KWh |
| மாருதி சுசூகி இ விட்டாரா | 49KWh, 61KWh |
| டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா | 49KWh, 61KWh |
| MG ZS EV | 50.3KWh |
| வின்ஃபாஸ்ட் விஎஃப்6 | 59.6KWh |
இதையும் படியுங்கள்: Maruti Alto k10: பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்
சியாரா EV Vs போட்டியாளர்கள் - ரேஞ்ச் விவரங்கள்
சியாராவின் மின்சார எடிஷனானது தனது சிறிய பேட்டரி பேக்கில் 565 கிலோ மீட்டர் தூரமும், பெரிய பேட்டரி பேக்கில் அதிகபட்சமாக 665 கிலோ மீட்டரும் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மஹிந்த்ராவின் BE 6 683 கிலோ மீட்டர் ரேஞ்சில் முதலிடத்தை பிடித்தாலும், க்ரேட்டா எலெக்ட்ரிக், இ விட்டாரா, எபெல்லா, MG ZS EV மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்6 ஆகியவற்றை காட்டிலும் சியாரா முன்னிலை பெறுகிறது.
| கார் மாடல்கள் | ரேஞ்ச் விவரங்கள் |
| டாடா சியாரா | 565 KM (63KWh), 665 KM (75KWh) |
| மஹிந்த்ராவின் BE 6 | 557 KM (59KWh), 683 KM (79KWh) |
| ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக் | 420 KM (42KWh),510 KM (51.4KWh) |
| மாருதி சுசூகி இ விட்டாரா | 440 KM (49KWh), 543 KM ( 61KWh) |
| டொயோட்டா அர்பன் க்ரூசர் எபெல்லா | 440 KM (49KWh), 543 KM (61KWh) |
| MG ZS EV | 461 KM (50.3KWh) |
| வின்ஃபாஸ்ட் விஎஃப்6 | 463 KM (59.6KWh) |
இந்திய பயணிகள் வாகன சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவில், டாடா சியரா EV போட்டித்தன்மை வாய்ந்த விலை, இரண்டு பேட்டரி பேக் தேர்வுகள் மற்றும் 665 கி.மீ. வரை செல்லும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது. நடுத்தர அளவிலான எலெக்ட்ரிக் எஸ்யூவி பிரிவில் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த இடத்தை பெறுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் இந்த காரானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI