TNEA Counselling Rank List 2026: 2026- 27ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு 3,02,373 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் 2,45,220 பேர் பதிவுக் கட்டணம் செலுத்தி இருந்தனர். ஜூன் 5ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற்ற நிலையில், இன்று (ஜூலை 1) தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது.
2.36 லட்சம் மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 10 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தரவரிசைப் பட்டியலைக் காண்பது எப்படி?
- மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில், https://www.tneaonline.org/user/login என்ற இணைப்பு மூலம் லாகின் செய்ய வேண்டியது அவசியம்.
- அதில் இ மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
- அதில் நம்முடைய தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் காணலாம்.
இதையும் வாசிக்கலாம்: NIRF Rankings 2025: NIRF தரவரிசை: தமிழ்நாட்டின் 14 டாப் பொறியியல் கல்லூரிகள்! உங்கள் கனவு காலேஜ் இருக்கா?
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tneaonline.org
மாணவர்கள் இதுதொடர்பான விரிவான விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
