டாடா மோட்டார்ஸ் வாகனங்கள் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளன. அதனால் தான், அந்நிறுவனத்தின் வாகனங்கள் ஒவ்வொரு மாதமும் அதிகமாக விற்பனையாகின்றன. டாடா நிறுவனம் சமீபத்தில் தனது சியரா EV-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. நீங்கள் ஒரு புதிய எலக்ட்ரிக் SUV வாங்க திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.

Continues below advertisement

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது பிரபலமான டாடா சியரா EV வாகனங்களின் விநியோகத்தைத் தொடங்கியுள்ளது. இந்த எலக்ட்ரிக் SUV, அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வாடிக்கையாளர்களிடமிருந்து அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், முன்பதிவு செய்தவர்கள் தற்போது தங்களது வாகனங்களை பெற்று வருகின்றனர். அதன் ஈர்க்கக்கூடிய பயண வரம்பு, ப்ரீமியம் அம்சங்கள் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புடன், டாடா சியரா EV இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக், மஹிந்திரா BE 6 மற்றும் MG ZS EV போன்ற வாகனங்களுடன் போட்டியிட தயாராக உள்ளது.

டாடா சியரா EV-யின் விலை என்ன.?

டாடா சியரா EV-யின் ஆரம்ப விலை 18.79 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். நிறுவனம் இதை பல்வேறு வேரியண்ட்கள் மற்றும் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் வழங்குகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைகள் மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் ஒரு மாடலை தேர்ந்தெடுக்கலாம். ப்யூர் 63 RWD வேரியண்டின் விலை 18.79 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். தமிழ்நாட்டில் இதன் ஆன்-ரோடு விலை 19.35 லட்சம் ரூபாயில் தொடங்கி, 28.09 லம்சம் ரூபாய் வரை செல்கிறது.

Continues below advertisement

நீங்கள் சென்னையில் டாடா சியரா EV-ஐ வாங்கினால், சாலை வரி அல்லது பதிவுக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. நீங்கள் காப்பீட்டிற்கு 1,00,350 ரூபாய் மற்றும் இதர கட்டணங்களுக்கு 19,290 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். இதன் மூலம், டாடா சியரா EV-யின் மொத்த ஆன்-ரோடு விலை 20.03 லட்சம் ரூபாயாகிறது.

டாடா சியரா EV பேட்டரி மற்றும் ரேஞ்ச்

பேட்டரி மற்றும் பயண தூரத்தைப் பொறுத்தவரை, டாடா சியரா EV-யானது, 63 kWh மற்றும் 75 kWh என இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம், சில நிமிடங்களிலேயே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயண தூரத்தை அடைய முடியும் என்றும், இது நீண்ட பயணங்களைக் கூட எளிதாக்குகிறது என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.

பயண வரம்பைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் கூற்றுப்படி, 63 kWh பேட்டரி பேக்கில், 535 கிமீ தூரம் பயணிக்க முடியும். அதன் நிஜ உலக பயன்பாட்டில் அதன் மைலேஜ் சுமார் 440 முதல் 460 கிமீ வரை இருக்கலாம். இதேபோல், 75 kWh பேட்டரி பேக்கில், 665 கிமீ தூரம் பயணிக்கலாம் என நிறுவனம் கூறும் நிலையில், நிஜ உலக பயன்பாட்டில் அதன் மைலேஜ் சுமார் 510 முதல் 530 கிமீ வரை இருக்கலாம்.

அம்சங்கள்

இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி நவீன தொழில்நுட்பம் மற்றும் ப்ரீமியம் அம்சங்களால் நிரம்பியுள்ளது. ஒரு பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், கனெக்டட் கார் டெக்னாலஜி, பல ஏர்பேக்குகள், ADAS போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பல ஸ்மார்ட் அம்சங்கள், இதை அதன் பிரிவில் ஒரு வலுவான போட்டியாளராக ஆக்குகின்றன.

 


Car loan Information:

Calculate Car Loan EMI