Tata Sierra Base Variant: டாடா சியாரா கார் மாடலின் அடிப்படை வேரியண்டில் என்ன அம்சங்கள், வசதிகள் இடம்பெறக்கூடும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
டாடா சியாரா எஸ்யுவி:
கடந்த 2020ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது முதலே, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள டாடாவின் சியாரா கார் மாடல் பேசுபொருளாகியுள்ளது. சந்தைப்படுத்தப்பட இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், சியாரா எஸ்யுவி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. பல தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில தகவல்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சியாரா பேஸ் வேரியண்டில் என்ன மாதிரியான அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என்பதை டாடா நிறுவனம் இன்னும் விளக்கவில்லை. இந்நிலையில் இந்த எஸ்யுவின் மிகவும் விலை குறைந்த வேரியணிடில் என்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
டாடா சியாரா பேஸ் வேரியண்ட் - எதிர்பார்ப்புகள்
சியாராவிற்காக டாடா அண்மையில் வெளியிட்ட டீசர் ஒன்றில், காரின் உட்புறத்தில் இரண்டு ஸ்க்ரீன்கள் இருந்ததை பார்க்க முடிந்தது. அநேகமாக அது பேஸ் வேரியண்டாக இருக்கக் கூடும். டாப் வேரியண்ட்களை மட்டும் தனித்துவமாக காட்டுவதற்காக அதில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே மற்றும் முன்புற பயணிக்கான டிஸ்பிளே என மூன்று ஸ்க்ரீன்கள் வழங்கப்படலாம். கவனத்தை ஈர்க்கும் விதமாக, டூஅல் ஸ்க்ரீன் அமைப்பில் ஹூட் செய்யப்பட்ட பின்னாக்கிள் கொண்ட வழக்கமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இருக்கலாம்
டூயல் ஸ்க்ரீன் செட்-அப்பானது ஹெட்-அப் டிஸ்பிளேவுடன் வரலாம். ட்ரிபிள் ஸ்க்ரீன் செட்-அப்புடன் காண்பிக்கப்பட்ட வேரியண்டில் இந்த அம்சம் இல்லாதது குறிப்பிடத்தக்கது. கண்ட்ரோலர்கள் ஏற்றப்பட்ட 2 ஸ்போக் இல்லுமினேடட் ஸ்டியரிங் வீல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை, கப்ஹோல்டருடன் கூடிய ரியர் சீட் ஆர்ம்ரெஸ்ட், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்டபள் மற்றும் ஃபோல்டபள் ORVM-கள், மல்டிபிள் ஏர்பேக்ஸ், EBD உடன் கூடிய ABS, குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் ஆகியவை ஸ்டேண்டர்ட் அம்சங்களாக வழங்கப்படலாம்.
டாடா சியாரா பேஸ் வேரியண்ட் - வடிவமைப்பு விவரங்கள்
டாடா சியாராவின் பேஸ் வேரியண்ட் பகல் நேரங்களில் ஒளிரு விளக்குகள் உடன் எல்இடி முகப்பு விளக்குகளை கொண்டுள்ளது. மேலும் எல்இடி டெயில் லேம்ப், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்ஸ் மற்றும் ஸ்டீல் வீல்கள் வழங்கப்படலாம். பெரிய அலாய் வீல்களானது டாப் வேரியண்ட்களுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கலாம். பேஸ் வேரியண்ட்களுக்கு ஒற்றை வண்ண விருப்பங்களும், ப்ரீமியம் வேரியண்ட்களுக்கு டூயல் டோன் ஃபினிஷிங்கையும் எதிர்பார்க்கலாம்.
டாடா சியாரா பேஸ் வேரியண்ட் - இன்ஜின் ஆப்ஷன்
புதிய 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தொடக்க வேரியண்ட்களுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டாப் வேரியண்ட்கலில் முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வரவிருக்கும் டாடா சியரா EV, நடுத்தர முதல் டாப் வேரியண்ட்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI