இந்திய வாகனச் சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான கார்களைத் தயாரித்து வழங்குவதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

Continues below advertisement

அந்த வகையில் இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பாரத் என்சிஏபி அமைப்பு சமீபத்தில் நடத்திய கிராஷ் டெஸ்ட் எனப்படும் பாதுகாப்புச் சோதனையில், டாடா நிறுவனத்தின் பிரபலமான எலக்ட்ரிக் காரான பஞ்ச் மின்சார கார் (Tata Punch EV) முழுமையான 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்தியச் சந்தையில் விற்பனையாகும் மிகவும் பாதுகாப்பான எலக்ட்ரிக் கார்களின் பட்டியலில் இந்த மாடலும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

5 ஸ்டார் மதிப்பீடு

இந்த கிராஷ் டெஸ்ட் சோதனையில், பெரியவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என இரண்டு முக்கிய பிரிவுகளிலும் டாடா பஞ்ச் இவி மிகச் சிறப்பான புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பைப் பொறுத்தவரை, அதிகபட்சமான 32 புள்ளிகளுக்கு 31.46 புள்ளிகளைப் பெற்று 5-ஸ்டார் ரேட்டிங்கை தட்டிச் சென்றுள்ளது. அதேபோல, குழந்தைகள் பாதுகாப்பிற்கான சோதனையிலும் இந்த கார் அதிகபட்சமான 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளைப் பெற்று, அதிலும் முழுமையான 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்று அசத்தியுள்ளது.

Continues below advertisement

முன்பக்க மோதல் மற்றும் பக்கவாட்டு மோதல் என அனைத்து வகையான சோதனைகளிலும் காரின் பாடி ஷெல் கட்டமைப்பு மிகவும் உறுதியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் அதிநவீன புதிய ஆக்டி.இவி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட முதல் கார் இதுவாகும். இந்த சோதனையில் டாடா பஞ்ச் இவி மாடலின் எம்பவர்டு பிளஸ் எஸ் லாங் ரேஞ்ச் என்ற டாப் எண்ட் வேரியண்ட் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடானது பஞ்ச் இவி காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன பாதுகாப்பு வசதிகள்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த காரில் பல்வேறு நவீன பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாகவே அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், அனைத்து இருக்கைகளுக்கும் த்ரீ-பாயிண்ட் சீட் பெல்ட்கள், சீட் பெல்ட் ரிமைண்டர், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டருடன் கூடிய 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டு வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ், சைல்டு சீட் மவுண்ட்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பான பேட்டரி பேக் அமைப்பும் இதன் சிறப்பம்சமாகும். நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரியைத் தொடர்ந்து பஞ்ச் இவியும் 5-ஸ்டார் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI