இந்தியாவில் கார்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஒவ்வொரு நிறுவனமும் தங்களது போட்டி நிறுவனங்களை சமாளிப்பதற்காக புதிய புதிய கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

Continues below advertisement

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது ஹுண்டாய். இவர்களின் கார்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகி வரும் நிலையில், ஹுண்டாய் நிறுவனம் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த 3 கார்களும் எஸ்யூவி கார்கள் ஆகும்.

1.Next-Gen Hyundai Creta:

ஹுண்டாயின் மிகவும் புகழ்பெற்ற காராக இந்திய சந்தையில் திகழ்வது கிரெட்டா. இதன் புதிய அப்டேட் வெர்சனாக இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள கார் Next-Gen Hyundai Creta. இந்த கார் அடுத்தாண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. 4.5 மீட்டர் நீளம் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. பெட்ரோல், டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் வசதி உள்ளது. வலுவான ஹைப்ரிட் வேரியண்டாகவும் இது உருவாகி வருகிறது.  கிரெட்டா காரில் காணப்படும் அனைத்து சிறப்பம்சங்களும் இந்த காரிலும் வலுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Continues below advertisement

2. Hyundai Bayon:

ஹுண்டாய் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற காராக சந்தையில் அறிமுகமாக உள்ள கார் இந்த Hyundai Bayon. சில வெளிநாடுகளில் இந்த கார் ஏற்கனவே விற்பனையாகி வருகிறது. இதில் ஸ்ப்லிட் எல்இடி விளக்குகள், அகலமான ஃப்ரன்ட் கிரில் வசதி உள்ளது. இந்த காரில் லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, சிக்ஸ் ஏர்பேக்குகள் வசதி உள்ளது. 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் எஞ்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 டீசல் எஞ்ஜின் வசதி உள்ளது.

3. Hyundai Compact Electric SUV:

ஹுண்டாய் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள மின்சார எஸ்யூவி கார் இந்த Hyundai Compact Electric SUV. மின்சார கார்களுக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் சூழலில், இந்த காருக்கும் வரவேற்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ஒரே சார்ஜில் 500 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது.  இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகமானால் டாடா நெக்ஸான் இவி, மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய கார்களுக்கு போட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது.

இந்த 3 கார்களும் அறிமுகமானால் ஹுண்டாயின் இந்திய சந்தை மதிப்பு மேலும் பன்மடங்கு உயரும் என்று கருதப்படுகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI