டாடா நிறுவனத்தின் பன்ச் சிஎன்ஜி மாடல் காரின் விலை இந்திய சந்தையில் ரூ.7.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாடா பன்ச் CNG:
டாடா நிறுவனம் அண்மையில் தான் ஆல்ட்ரோஸ் CNG கார் மாடலை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து, தனது பன்ச் CNG மாடலை காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அது தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் டாடா நிறுவனத்தின் நான்காவது சிஎன்ஜி கார் எனும் பெருமையை பன்ச் பெற்றுள்ளது. ஏற்கனவே அந்த நிறுவனம், டியாகோ, டைகோர், மற்றும் ஆல்ட்ரோஸ் ஆகிய மாடல் கார்களையும், சிஎன்ஜி வெர்ஷனில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது புதியதாக பன்ச் இணைந்துள்ளது.
விலையும், வேரியண்ட்களும்:
இந்திய சந்தையில் டாடா பன்ச்சின் தொடக்க விலை ரூ.7.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.9.68 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பியூர், அட்வென்ச்சூர் மற்றும் அக்கம்ப்லிஸ்ட் என மூன்று வேர்யண்ட்களில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அட்வென்ச்சூர் மற்றும் அக்கம்ப்லிஸ்ட் வேரியண்ட்கள் நார்மல் பன்ச் வெர்ஷனிலும் கிடைக்கப்பெறுவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், பன்ச்சின் டாப் எண்ட் மாடலான கிரியேடிவ் சிஎன்ஜி வெர்ஷனில் வழங்கப்படவில்லை.
டாடா பன்ச் சிஎன்ஜி விலை விவரங்கள் (courtesy: tata twitter)
இன்ஜின் விவரங்கள்:
Altroz உடன் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் பஞ்ச் CNG ஆனது, 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர், NA பெட்ரோல் மோட்டார் மூலம் 86bhp மற்றும் 113Nm டார்க்கை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட CNG பயன்முறையில், இது 73.4bhp மற்றும் 103Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதற்கான 60 லிட்டர் எரிபொருள் டேங்க் இரண்டு சமபாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
வடிவமைப்பு & சிறப்பம்சங்கள்:
காரின் வடிவமைப்பை பொறுத்தவரையில் பஞ்ச் சிஎன்ஜி வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்களைக் காணவில்லை. அதேபோல், பஞ்ச் சிஎன்ஜியின் உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரம், காரில் இடம்பெற்றுள்ள அம்சங்களை பொருத்தவரை டாடா பன்ச் CNG மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூப், ஆறு ஏர்பேக், டுவின் சிலிண்டர் CNG டேன்க், CNG மோடில் டைரக்ட் ஸ்டார்ட் வசதி, 7 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. தானியங்கி புரொஜெக்டர் முகப்பு விளக்குகள், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை மற்றும் பெட்ரோலில் இயங்கும் பன்ச் வேரியண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI