பாதுகாப்பு அம்சங்களுக்காக இந்திய கார் சந்தையில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்ட காராக டாடா உள்ளது. ஹுண்டாய், மாருதி சுசுகி போன்ற தனது போட்டி நிறுவனங்களுக்கு இணையாக விற்பனையை தக்க வைக்க டாடா நிறுவனம் அவ்வப்போது தள்ளுபடி அறிவித்து வருகிறது.
டாடா நிறுவனம் பண்டிகை காலத்திற்காக பல சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. ஓணம் பண்டிகை வரும் ஆகஸ்ட் 26ம் தேதி வருகிறது. ஓணம் பண்டிகை மலையாளிகளின் அடையாளமாக உள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு டாடா நிறுவனம் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.
எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே காணலாம்.
1. Tiago - ரூ. 60 ஆயிரம்
2. Tigor - ரூ. 60 ஆயிரம்
3. Altroz - ரூ. 1 லட்சம்
4. Punch - ரூ. 65 ஆயிரம்
5. Nexon - ரூ. 60 ஆயிரம்
6. Curvv - ரூ. 40 ஆயிரம்
7. Harrier - ரூ. 75 ஆயிரம்
8. Safari - ரூ. 75 ஆயிரம்
சாதாரண கார்கள் மட்டுமின்றி மின்சார வாகனங்களுக்கும் இந்த சலுகைகளை டாடா அறிவித்துள்ளது.
1. Tiago.ev - ரூ. 1 லட்சம்
2. Punch.ev - ரூ. 85 ஆயிரம்
3. Nexon.ev - ரூ. 1 லட்சம்
4. Curvv.ev - ரூ. 2 லட்சம்
5. Harrier.ev - ரூ. 1 லட்சம்
13 கார்களுக்கு சலுகை:
இந்த 13 கார்களுக்கு டாடா நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக டாடா கர்வ் மின்சார காருக்கு ரூபாய் 2 லட்சம் சலுகை அறிவித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, ஆல்ட்ராஸ் கார், நெக்சான் மின்சார கார் மற்றும் ஹாரியர் மின்சார காருக்கு தலா ரூ. 1 லட்சத்தை அறிவித்துள்ளனர்.
விற்பனை அதிகரிக்குமா?
இந்தியாவில் கேரளாவில் டாடாவிற்கு தனி வரவேற்பு உள்ளது. ஏனென்றால், மலைப்பாங்கான இடங்கள் அங்கு அதிகம் இருப்பதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டாடா கார்கள் அதிகளவு அங்கு விற்பனையாகும். டாடா பஞ்ச் கார் கடந்தாண்டு அவர்களுக்கு மிக அதிகளவு விற்பனையான கார் ஆகும். அந்த காருக்கு ரூபாய் 65 ஆயிரம் வரை சலுகை அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாடா கர்வ் மின்சார கார் எஸ்யூவி வகை கார் ஆகும். மொத்தம் 9 வேரியண்ட்களை கொண்டுள்ள இந்த காரின் விலை ரூபாய் 17 லட்சம் முதல் 23 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆட்டோமெட்டிக் கியர் காரான இந்த காரின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் இந்த காருக்கு அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சம் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ஆல்ட்ரோஸ் அதிரடி விலை குறிப்பு:
22 வேரியண்ட்களை கொண்ட டாடா ஆல்ட்ரோஸ் கார் பெட்ரோலில் ஓடும் கார் ஆகும். இந்த காரின் விலை ரூபாய 6 லட்சத்தில் இருந்து ரூபாய் 12 லட்சம் வரை உள்ளது. இந்த காருக்கு ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்திருப்பது இந்த காரின் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமின்றி அதிகளவு விற்பனையாகும் டியோகா பெட்ரோல் காருக்கு ரூபாய் 60 ஆயிரமும், டியாகோ மின்சார காருக்கு ரூபாய் 1 லட்சமும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டாடா நெக்சான் மின்சார காருக்கு ரூபாய் 1 லட்சமும், நெக்சான் பெட்ரோல் காருக்கு ரூபாய் 60 ஆயிரமும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் சலுகை அறிவிப்பால் இந்தியா முழுவதும் டாடாவின் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும் என்று டாடா நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும், தீபாவளிக்காகவும் பல புதிய கார்களை அறிமுகப்படுத்துவதுடன் சலுகைகளை அறிவிக்கவும் டாடா திட்டமிட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI