இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம் டாடா. டாடா நிறுவனத்தின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு ஆகும். இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சார கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மின்சார கார்கள் சந்தையில் டாடா மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

Continues below advertisement

Tata Kuno EV:

டாடா நிறுவனம் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள மின்சார கார் Tata Kuno EV. இது ஒரு மிட்சைஸ் எஸ்யூவி கார் ஆகும். இந்த கார் அடுத்தாண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. 4.3 மீட்டர் நீளம் கொண்டது இந்த கார். இந்த கார் நெக்ஸ் ஜென் நெக்ஸான் மின்சார கார் மற்றும் சியாரா இவி மின்சார கார்களுக்கு இடையேயான ஒரு வெற்றிடத்தை நிரப்பும் காராக அமையும் என்று டாடா நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.

அறிமுகமாக உள்ள 6 மின்சார கார்கள்

இந்த கார் குஜராத்தில் உள்ள டாடா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2031ம் ஆண்டுக்குள் புதியதாக 6 மின்சார கார்களை அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  இந்த காரில் எத்தனை கிலோவாட் பேட்டரி பொருத்தப்படும் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

வசதிகள்:

லெவல் 2 அடாஸ் வசதி, பனோராமிக் சன்ரூஃப் வசதி, டச் ஸ்கிரின் வசதி கொண்டதாக இந்த கார் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இந்த காரை ஃப்ரன்ட் வீல் ட்ரைவ், ரியர் வீல் ட்ரைவ் மற்றும் ஆல் ட்ரைவ் வேரியண்ட்களில் அறிமுகமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த காரைப் பொறுத்தமட்டில் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளது. மேலும், பாதுகாப்பு அம்சங்களில் எந்தவித சமரசமும் இல்லாமல் டாடாவின் உயர்தர பாதுகாப்பு இந்த காரில் இடம்பெற உள்ளது.

டாடா திட்டம்:

மின்சார கார்கள் தயாரிப்பில் அதிகளவு கவனம் டாடா நிறுவனம் செலுத்தி வரும் நிலையில், போட்டி நிறுவனங்களான மஹிந்திரா, ஹுண்டாய் ஆகிய கார் நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் வரும் ஆண்டுகளில் டாடா குனோ போன்ற பல்வேறு மின்சார கார்களை அறிமுகப்படுத்தவும், அதன் மைலேஜ் ஆற்றலை அதிகரித்து தரவும் திட்டமிட்டுள்ளது. 

 


Car loan Information:

Calculate Car Loan EMI