Tata Harrier EV: டாடா நிறுவனத்தின் ஹாரியர் மின்சார எடிஷன் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது.

Continues below advertisement

டாடா ஹாரியர் EV வெளியீடு:

டாடா நிறுவனம் தனது ஹாரியர் கார் மாடலின் மின்சார எடிஷனை, வரும் ஜுன் 3ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த ஜனவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட பிறகு, தொடர்ந்து டீசர்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது வெளியீட்டு தேதியை டாடா உறுதிப்படுத்தியுள்ளது.

டாடா ஹாரியர் EV வெளிப்புற வடிவமைப்பு:

டாடா ஹாரியர் மின்சார எடிஷனாது பெரும்பாலும் டீசர்ல் ஹாரியர் ஃபேச்லிஃப்ட்டை போன்றே காட்சியளிக்கிறது. பிளேட் மாதிரியான DRL-களுக்கு கீழே செங்குத்தக்காக பொருத்தப்பட்ட எல்இடி முகப்பு விளக்குகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவை முழு நீளத்திற்குமான லைட் பாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்வாலன் வீல் ஆர்செஸ், ஃளோட்டிங் ரூஃப் எஃபெக்ட் அனைத்தும் டீசல் ஹேரியரை போன்றே உள்ளன. இதன் பின்புறத்திலும் கனெக்டட் லைட் பார், பம்பர் மீது பொருத்தப்பட்ட வெர்டிகல் ஃபாக் லேம்ப் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

டாடா ஹாரியர் EV எடிஷனுக்கான திருத்தம்

சீல்ட் ஆஃப் கிரில் தனித்துவமாக காட்சியளிக்கிறது, முன்புற பம்பரானது கர்வ் மின்சார எடிஷனில் இருப்பதை போன்ற க்ரோம் - ட்ரிம்மிட் ஏர் டேமை போன்று வழங்கப்பட்டுள்ளது. அலாய் வீல்களின் அளவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், 17 முதல் 19 இன்ச் வீல்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்புற கதவில் “.EV” என்ற பேட்ஜும், டெயில்கேட்டில் ”HARRIER. EV” என்ற பேட்ஜும் இதனை தனித்துவமாக மாற்றுகிறது. கூடுதலாக தனித்துவத்திற்காக பாடி கிளாடிங்கானது சில்வர் கொண்டு முடிக்கப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் EV உட்புறம்:

புதிய மின்சார எடிஷன்  ஹாரியரின் உட்புறத்தை விளக்கும் டீசரை கடந்த மார்ச் மாதம் டாடா நிறுவனம் வெளியிட்டது. அதன்படி, தற்போதுள்ள நிலையான ஹாரியரில் உள்ள பல்வேறு அம்சங்களுடன் மின்சார எடிஷன் ஒத்துப்போகிறது. உதாரணமாக இரண்டு டோன் டேஷ்போர்ட், தொடுதல் அடிப்படையிலான HVAC கண்ட்ரோல்கள் அப்படியே தொடர்கின்றன. ஹாரியரில் இருப்பதைபோன்ற ஃப்ளோட்டிங் டச்ஸ்க்ரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் 4 ஸ்போக் ஸ்டியரிங் வீலை கொண்டுள்ளது. ஹாரியர் EV புதிய டெரெய்ன் மோடுகள், இணைக்கப்பட்ட கார் அம்சங்கள் மற்றும் ஓவர் தி ஏர் அப்டேட்களை கொண்டுள்ளது.

ஹாரியர் பிளாட்ஃபார்ம்

விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய மின்சார காரானது புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படமால், இன்ஜின் எடிஷன் உருவாக்கப்பட்ட ஒமேகா பிளாட்ஃபார்மில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேநேரம், மின்சார வாகனத்திற்காக இந்த பிளாட்ஃபார்ம் கடுமையான திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புதிய காரின் சேசஸ் மற்றும் ஃப்ளோர் ஆனது புதிய பேட்டரி மற்றும் மின்சாதனங்களை பொருத்துவதற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை டாடா நிறுவனம் Acti.ev (Gen 2) ஆர்கிடெக்ட்சர் என குறிப்பிடுகிறது.  பஞ்ச் மின்சார எடிஷனுக்கான உற்பத்தியின் போதும், இன்ஜின் எடிஷனின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மை இதேபோன்று டாடா திருத்தியது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி, செயல்திறன்

டீசல் எடிஷனில் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் தொழில்நுட்பம் இருந்த நிலையில், புதிய மின்சார எடிஷனில் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய ரி-இன்ஜினியரிங் மற்றும் செலவி மிகுந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது. பின்புறத்தில் மின்சார மோட்டாரைச் சேர்ப்பதன் மூலம் AWD அடைய எளிதானது. செயல்திறனை மேம்படுத்தக் கூடிய அதிக சக்தி வாய்ந்த ரியர்-ஆக்சில் மவுண்டட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 500Nm இழுவை திறனை உற்பத்தி செய்யக்கூடும். 

ஹாரியரின் பேட்டரி அளவு தற்போது வரை உறுதி செய்யப்படாவிட்டாலும், அது கர்வ் மாடலில் உள்ள 55 KWh  யூனிட்டை காட்டிலும் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், 500 கிமீ ரேஞ்ச் வழங்கும் என டாடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  வெஹைகிள் டூ வெஹைகிள், வெஹைகிள் டூ லோட் சார்ஜிங் திறன் கொண்டுள்ளது.

விலை விவரங்கள்:

டாடா ஹாரியர் மின்சார எடிஷனின் விலை ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்திய மின்சார கார் சந்தையில் மஹிந்திராவின் XEV 9e கார் மாடலுக்கு போட்டியாகலாம். ஹாரியர் மின்சார எடிஷனானது இந்திய சந்தையில் உள்ள டாடாவின் மின்சார கார்களான டியாகோ, டைகோர், பஞ்ச், நெக்ஸான் மற்றும் கர்வ் ஆகியவற்றுடன் இணைய உள்ளது. இதுபோக, டாடாவின் சியாரா மின்சார கார் எடிஷனும் விரைவில் அறிமுகமாக உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI