Tata Harrier EV RWD Full Price: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா ஹாரியர் மின்சார கார் (RWD) 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

டாடா ஹாரியர் EV RWD:

டாடா நிறுவனம் தனது ஹாரியர் மின்சார கார் மாடலின் அனைத்து RWD வேரியண்ட்களுக்குமான விலையை அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த ரியர் வீல் ட்ரைவ் அமைப்பை கொண்ட காரின் தொடக்க விலை மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, ரூ.21.49 லட்சத்தில் தொடங்கும் இந்த காரின் விலை ரூ.27.49 லட்சம் வரை நீள்கிறது. இந்த காருக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு, வரும் ஜுலை 2ம் தேதி தொடங்குகிறது.  ஏசி சார்ஜரை தேர்ந்தெடுப்பது மற்றும் அதனை இன்ஸ்டால் செய்வது ஆகியவை இந்த விலைக்குறிப்பில் அடங்காது. 

டாடா ஹாரியர் EV RWD: விலை விவரங்கள்:

வேரியண்ட் பேட்டரி பேக் விலை
Adventure 65 65 KWh ரூ.21.49 லட்சம்
Adventure S 65 65 KWh ரூ.21.99 லட்சம்
Fearless+ 65 65 KWh ரூ.23.99 லட்சம்
Fearless+ 75 75 KWh ரூ.24.99 லட்சம்
Empowered 75 75 KWh ரூ.27.49 லட்சம்

டாடா ஹாரியர் EV: தொழில்நுட்ப அம்சங்கள்

ஹாரியர் மின்சார எடிஷனில், இந்த செக்மெண்டிலேயே முதல் வாகனமாக 14.53 இன்ச் QLED டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமை பெற்றுள்ளது. கூடுதலாக, டால்பி அட்மாஸ் உடன் கூடிய 10 ஸ்பீக்கர் ஜேபிஎல் பிளாக் சவுண்ட் சிஸ்டம், ஃப்ரீக்வன்சி டிபெண்டண்ட்  டெம்பிங்க் தொழில்நுட்பத்தைச் சார்ந்த ஸ்பெஷிஃபிக் ஆடியோ ப்ரொஃபைல்ஸ் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், e-வாலெட் ஆட்டோ பார்க் அசிஸ்ட், டிஜிட்டல் அக்செஸிற்கான டிஜிட்டல் கீ, காருக்குள்ளேயே இருந்தபடியே பணப்பரிவர்த்தனைக்கு உதவும் டாடாவின் ட்ரைவ்பே அம்சமும் புதிய ஹாரியர் மின்சார எடிஷனில் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: இதுக்கு எதுக்குயா ரூ.23 லட்சம்? டாடா ஹாரியர் EV-யை தலையில் தட்டிய ஆல்டோ கே10 ? லாஸ்ட்ல ட்விஸ்ட்

டாடா ஹாரியர் EV: பேட்டரி விவரங்கள்:

பேட்டரி விவரங்கள் டாப் ஸ்பெக்குகளுக்கு மாறுபடுகிறது.  அதில் பெரிய 75 KWh பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், குறிப்பிட்ட சூழலில் அதிகபட்சமாக 627 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. நிகழ் உலகில் இது சுமார் 480 முதல் 505 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 15 நிமிடங்களில் 250 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் வகையில் சார்ஜ் செய்ய முடியும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா ஹாரியர் EV: பாதுகாப்பு அம்சங்கள்

ஹாரியர் மின்சார எடிஷனில் 6 ஏர் பேக்குகள் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது. டாப் ஸ்பெக்கில் 7 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. இதுபோக, 360 டிகிரி கேமரா, பில்ட் - இன் - டேஷ் கேம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சாலைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட லெவல் 2 ADAS தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஹாரியரில் வழங்கப்பட்டுள்ள அனைத்து கேமராக்களில் இருந்தும் நேரடி ஒளிபரப்பை வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆஃப்- ரோடில் பெரிதும் பயனளிக்கக்கூடிய இந்த வசதி, மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி பிரிவில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும்.

டாடா ஹாரியர் EV AWD:

இரட்டை மோட்டார் ஆல் வீல் ட்ரைவ் அம்சம் கொண்ட எடிஷனின் முழு விவரங்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த  காரின் டாப் ஸ்பெக் வேரியண்ட்களானது, 396 PS ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. அதில் முன்புற மோட்டார் 158 PS ஆற்றலையும், பின்புற மோட்டார் 238 PS ஆற்றலையும் உற்பத்தி செய்து, 504 Nm இழுவை திறனை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.3 விநாடிகளில் எட்ட முடியும். இதன் மூலம், மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்டில் மிகவும் வேகமான வானமாக கருதப்படுகிறது. பலதரப்பட்ட மோசமான சாலைகளையும் கையாளும் விதமாக, 6 டெரெய்ன் மோட்கள் இதில் இடம்பெற்று இருப்பது கவனத்தை ஈர்க்கிறது. இதில் இடம்பெற்றுள்ள 540 டிகிரி கேமராவனது வாகனத்திற்கு கீழே என்ன இருக்கிறது என்பதை, ட்ரான்ஸ்பரன்ட் மோடில் காண உதவுகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI