இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டாடா. பட்ஜெட் விலையிலும், நடுத்தர விலையிலும், சொகுசு கார்களும் டாடாவால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. 

Continues below advertisement

Tata Curvv:

அந்த வகையில், டாடாவின் வெற்றிகரமான படைப்பாக இந்தியாவில் இருப்பது Tata Curvv. இது ஒரு எஸ்யூவி கூபே ரக கார் ஆகும். பல்வேறு வசதிகளை கொண்ட இந்த கார் தோற்றத்தாலும், உட்கட்டமைப்பாலும் வசீகரமானதாக அமைந்துள்ளது. 

விலை என்ன?

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.51 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 23.37 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 42 வேரியண்ட் உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 

Continues below advertisement

மைலேஜ்:

பெட்ரோல் வேரியண்ட்டில் 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் வேரியண்டில் 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 116 பிஎச்பி மற்றும் 118 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 

இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் Kryojet எஞ்ஜின் பொருத்தப்பட்டள்ளது. 6 கியர்கள் மற்றும் 7 கியர்களை கொண்டது. எகோ, ஸ்போர்ட் மற்றும் சிட்டி மோட்களில் இந்த கார் உள்ளது. 18 இன்ச் சக்கரம் கொண்டது. 260 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 19 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

சிறப்பம்சங்கள்:

இந்த காரில் பனோரமிக் சன்ரூஃப், குரல் கட்டளை, அலெக்ஸா, சிரி, கூகுள் அசிஸ்டன்ட் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகள், எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக், எலக்ட்ரிக் ட்ரைவர் சீட், மழையை உணர்ந்து செயல்படும் வைபர் வசதி இதில் உள்ளது. 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. 9 ஸ்பீக்கர் வசதி கொண்டது.  10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதி உள்ளது. பிஎன்சிஏபி ரேட்டிங்கில் 5 ஸ்டார் தரவசதி கொண்டது. வெலல் 2 அடாஸ் வசதி கொண்டது. 

வயர்லஸ் சார்ஜர், ஸ்மார்ட்போன் வசதி உள்ளது. 500 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. இந்த காரில் மொத்தம் 6 ஏர்பேக் வசதி கொண்டது. ஏபிஎஸ் வித் இபிடி வசதி கொண்டது. இஎஸ்பி, ஹில் ஹோல்ட், 3 பாயிண்ட் சீட்பெல்ட் வசதி உள்ளது. எமர்ஜென்சி ப்ரேக்கிங் வசதி கொண்டது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. இந்த கார் தங்க நிறம், சிவப்பு, வெள்ளை, சாம்பல், நீலம் போன்ற நிறங்களில் உள்ளது. 

வோக்ஸ்வேகன் டைகன், ஸ்கோடா குஷக், கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI