Tata Altroz Facelift: டாடா ஆல்ட்ரோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் வரும் 22ம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டீசல் இன்ஜின் கொண்ட கடைசி ஹேட்ச்பேக் மாடலாக டாடா மோட்டார்ஸின் ஆல்ட்ரோஸ் கார் மாடல் உள்ளது. அதேநேரம், இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பம் கொண்ட ஒரே பிரீமியம் ஹேட்ச்பேக்காகவும் திகழ்கிறது. இந்நிலையில் தான், அதனை வெளிப்புறம் தொடங்கி உட்புறம் வரையில் அனைத்து அம்சங்களில், ஆல்ட்ரோஸை மாற்ற டாடா திட்டமிட்டது. அதன்படி, வரும் மே 22ம் தேதி வெளியிடப்பட உள்ள மேம்படுத்தப்பட்ட ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற விவரங்களை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூடுதல் பிரீமியம் - ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட்:
பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் மாருதி சுசூகி பலேனோ, டொயோட்டா கிளான்சா மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆகிய மாடல்களுடன் இந்திய சந்தையில் ஆல்ட்ரோஸ் போட்டியிடுகிறது. அந்த போட்டியாளர்களை ஓரம் கட்டும் விதமாக, ஏற்கனவே பிரீமியம் மாடலாக உள்ள ஆல்ட்ரோஸை டாடா நிறுவனம் கூடுதல் பிரீமியமாக மாற்றியுள்ளது. இது அதன் வெளிப்புற வடிவமைப்பே உறுதிப்படுத்திய நிலையில் தான், தற்போது உட்புற மேம்படுத்தல்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஆல்ட்ரோஸ் - கவனத்தை ஈர்க்கும் அப்டேட்ஸ்
ஆல்ட்ரோசில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் தூய்மையானதகாவும், கையாள மிகவும் முதிர்ச்சித்தன்மை கொண்டதாகவும் காட்சியளிக்கிறது. ஏசி வெண்ட்கள் மிகவும் எளிதாக மாற்றம் கண்டுள்ளத. கிளைமேட் கண்டோல் பேனல் ஆனது டச் & டாகல் டைப்பில் உள்ளது. சென்டர் கன்சோலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆட்டோமேடிக் வேரியண்ட்களுக்கு புதிய கியர் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், மேனுவல் ஹேண்ட் பிரேக், சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பின்புற ஏசி வெண்ட் ஆகியவை பழைய எடிஷனில் இருப்பதை போன்று அப்படியே தொடர்கிறது.
குறிப்பிடத்தக்கதாக புதிய ஸ்டியரிங் வீல் அதன் பின்புறத்தில் உள்ள 10.2 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகியவை கவனம் ஈர்க்கின்றன. இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டருடன் பயனர்கள் தங்களது ஆண்ட்ராய் அல்லது ஸ்மார்ட்ஃபோன்களை வயர்லெஸ் முறையில் இணைத்தால், முழு மேப் டேட்டாவையும் திரையில் காட்டும் திறன் கொண்டுள்ளது.
புதுசா என்ன இருக்கு?
இருக்கைகள் முற்றிலும் புதியதாகவும், பயணத்தின் போது மிகவும் ஆதரவளிகக் கூடியதாகவும் உள்ளன. ஒற்றை கண்ணாடி சன்ரூஃப் தொடர்வதையும், 360 டிகிரி கேமரா இருப்பதையும் வீடியோ காட்டுகிறது. முன்னதாக வெளிப்புறம் தொடர்பான வீடியோவால், LED DRLs முன்பை விட மிகப்பெரியதாகவும், முகப்பு விளக்குகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதையும் அறிய முடிந்தது. இதுபோக புதிய கிரில் என பல்வேறு அம்சங்களும் ஆல்ட்ரோஸ் ஃபேச்லிஃப்டில் இணைக்கப்பட்டுள்ளன.
இன்ஜின் & விலை விவரங்கள்:
வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு இருந்தாலும், இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யாமல், அப்படியே தொடர்கிறது. அதன்படி, 1.2 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் இன்ஜின் ஆனது 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 6 ஸ்பீட் DCAட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டுள்ளது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது தற்போது 5 ஸ்பீட் கியர்-பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது. 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி ஆப்ஷனில் கிடைக்கிறது.
தற்போதைய ஆல்ட்ரோஸ் கார் மாடலின் விலை ரூ.6.65 லட்சத்திலிருந்து ரூ.11.30 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தொழில்நுட்ப அம்சங்கள் காரணமாக, புதிய ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிப்ஃட் மாடலின் விலை, ரூ.6.8 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI