சுஸுகி நிறுவனம் தனது 125cc எஞ்சினை வைத்து மூன்று வெவ்வேறு விதமான ஸ்கூட்டர்களை சந்தையில் வழங்கி வருகிறது. இதில் இன்ஜின் ஒன்றுதான் என்றாலும், இவற்றின் பயன்பாடும் ஸ்டைலும் முற்றிலும் மாறுபட்டவை. 2026-ன் தற்போதைய அப்டேட்களுடன் இவற்றின் ஒப்பீட்டை இங்கே காணலாம்.

Continues below advertisement

வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் 

சுஸுகி அக்சஸ் 125: இது ஒரு கிளாசிக் (Classic) மாடல். ரெட்ரோ ஸ்டைல், ரவுண்ட் ஹெட்லேம்ப் மற்றும் க்ரோம் ஃபினிஷிங் என ஒரு நேர்த்தியான ஃபேமிலி ஸ்கூட்டராக உள்ளது. அனைத்து தரப்பினரும் ஓட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது

சுஸுகி பர்க்மேன்: இது ஒரு மேக்ஸி-ஸ்கூட்டர் (Maxi-scooter). மிகப்பெரிய பாடி, அகலமான சீட் மற்றும் விண்ட்-ஸ்கிரீன் என மிகவும் 'ப்ரீமியம்' தோற்றத்தைக் கொண்டது. சாலையில் செல்லும்போது ஒரு பிரீமியம் மற்றும் ராஜா பார்வையைக்  கொடுக்கும்.

Continues below advertisement

சுஸுகி அவெனிஸ்: இது இளைஞர்களுக்கான ஸ்போர்ட்டி (Sporty) மாடல். கூர்மையான கோடுகள், ஹேண்டில்பாரில் உள்ள இண்டிகேட்டர்கள் மற்றும் ஏரோடைனமிக் டிசைன் என இது பார்க்க டிவிஎஸ் என்டார்க் (Ntorq) போன்ற ஸ்போர்ட்டி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

என்னென்ன வசதிகள் உள்ளன?

வசதிகள்அக்சஸ் 125பர்க்மேன் 2026அவெனிஸ் 125
டிஸ்ப்ளேடிஜிட்டல்/அனலாக் (TFT ஆப்ஷன் உள்ளது)முழு டிஜிட்டல் கிளஸ்டர்முழு டிஜிட்டல் கிளஸ்டர்
ப்ளூடூத்Ride Connect உண்டுRide Connect உண்டுRide Connect உண்டு
லைட்டிங்LED ஹெட்லேம்ப்முழு LED செட்டப்LED ஹெட் & டெயில் லேம்ப்
சார்ஜிங் போர்ட்உண்டு (USB)உண்டு (USB)உண்டு (USB)
ஸ்டோரேஜ்தாராளமான இடம்மிகப்பெரிய இடம்நடுத்தர ஸ்டோரேஜ்

எஞ்சின் மற்றும் செயல்திறன் (Engine Performance)

இந்த மூன்றிலும் ஒரே 124cc, 1-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் தான் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆற்றல் சுமார் 8.7 PS பவர் மற்றும் 10 Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது ஸ்கூட்டர்கல் தோராயமாக லிட்டருக்கு 45 - 55 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும் (ஓட்டும் முறையைப் பொறுத்து மாறுபடும்). அவெனிஸ் மற்றும் அக்சஸ் எடை குறைவு என்பதால் சற்றே கூடுதல் வேகம் (Pick-up) கொண்டதாக உள்ளடு

விலை விவரங்கள் (Ex-Showroom Price)விலையைப் பொறுத்தவரை அக்சஸ் பட்ஜெட்டிற்குள்ளும், பர்க்மேன் சற்று உயர்வாகவும் உள்ளது

  • சுஸுகி அக்சஸ் 125: ₹80,000 - ₹94,000 வரை.
  • சுஸுகி அவெனிஸ் 125: ₹86,000 - ₹92,000 வரை.
  • சுஸுகி பர்க்மேன்: ₹94,000 - ₹1.14 லட்சம் வரை.

எதை வாங்கலாம்?

சுஸுகி அக்சஸ் 125: நீங்க ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், அலுவலகம் மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்கு ஒரு எளிமையான, தரமான ஸ்கூட்டர் வேண்டுமென்றால் இதைத் தேர்வு செய்யலாம்.

சுஸுகி பர்க்மேன்: சொகுசான பயணத்தை விரும்புபவர் என்றால், நீண்ட தூரம் ஸ்கூட்டரில் பயணம் செய்பவர் மற்றும் ஒரு கம்பீரமான தோற்றம் வேண்டும் என்பவர்களுக்கு இதுவே சிறந்த சாய்ஸ்.

சுஸுகி அவெனிஸ்:  கல்லூரி மாணவர் அல்லது இளைஞர், உங்களுக்கு வேகமான பிக்-அப் மற்றும் மிரட்டலான ஸ்போர்ட்டி லுக் கொண்ட ஸ்கூட்டர் வேண்டுமென்றால் அவெனிஸைத் தேர்ந்தெடுக்கலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI