விடுதலை புலிகள் தடை வழக்கு - வைகோ ஆஜர்

Continues below advertisement

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலைப் புலிகள் தடை வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றம் வருகை புரிந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கை பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் , சென்னை உயர்நீதிமன்ற வளாகம் வெளியே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ; 

Continues below advertisement

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க கோரி வழக்கு நடைபெற்று வருகிறது. விடுதலை புலிகள் மீதான தடையை மத்திய அரசு பிரகடனம் செய்தது. 2014 ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் தடை இருந்தது. பின்னர் 5 ஆண்டுகள் தடை இருந்தது. ஒவ்வொரு தீர்பாயத்திற்கு நான் நேரில் சென்று வழக்காடி வருகிறேன். பல அமர்வுகளாக நடந்து வந்த இந்த வழக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி இந்த வழக்கை எடுத்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அன்றயை தினம் வழக்கு விசாரணை உறுதியாக நடைபெறும் என தெரிவித்தார்.

வந்தே பாரதம் பாடலை தேசிய கீதம் பாடல் ஆக ஏற்று கொள்ளலாமா என வாதம் வந்த போது , இந்துக் கடவுளை போற்றி வணங்கும் வரிகள் நான்கு Paragraph இருந்தது. அதனால் அப்போது அந்த பாடல் வேண்டாம் என பேசப்பட்டது. ஆனால் இன்று அதை நிறைவேற்றி உள்ளார். வந்தே பாரதம் முழு பாடல்களும் நீக்கபட்ட வரிகளும் சேர்ந்து எல்லா அரசு விழாக்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் பாட வேண்டும் என சட்டம் நிறைவேற்றி உள்ளனர். இது கொடுமையிலும் கொடுமை.

வந்தே பாரதம் பாடல்களை கொண்டு வந்தது மட்டுமல்ல காந்தி படத்தையும் ரூபாய் நோட்டில் இருந்து  நீக்குவதற்கு உள்ளுக்குள் அவர்கள் அஜண்டா Agenda வைத்திருப்பதாக சந்தேகிக்கிறேன்.டெல்லி தலைநகரத்தை மாற்றி வாரணாசியில் தலைநகரமாக மாற்றுகின்ற அந்தரங்க முடிவை செயல்படுத்துவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சனாதான கோட்பாட்டை நிலை நாட்ட முயற்சி

பெரும்பான்மை இருக்கிறதாக நினைத்துக் கொண்டு இதனை நிறைவேற்றி வருகிறார்கள்.நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக் குறியாக உள்ளது. சம ஒற்றுமை மத நல்லிணக்கம் சிதைத்து சிறுபான்மை மக்களின் மனதை சிதைத்து சனாதான கோட்பாட்டை நிலை நாட்ட முயற்சி செய்கிறார்கள். இதற்கு எதிர் விளைவுகள் கண்டிப்பாக ஏற்படும் எனவும் , முழுக்க முழுக்க இந்துத்துவா கோட்பாடுகளை பின்பற்றுகின்றனர். துரோகி சாவர்கர் படத்தை திறந்து வைத்து உள்ளார்கள்.

விஜய்க்கும் , திரிஷாவுக்கும் இடையே இருப்பது என்னவென்று எனக்கு தெரியாது. நயினார் பேசியதற்கு பிறகு தான் இப்படி இருக்கிறதா என தெரிய வருகிறது.

நயினார் நாகேந்திரன் நேர்மையானவர் பண்பாளர் அமைச்சராக இருந்தவர், தனிப்பட்ட நபர்களில் வாழ்க்கையை விமர்சிப்பது தவிர்த்துக் கொள்பவன் நான். அது போல விமர்சனங்கள் செய்யாமல் இருப்பது நல்லது என நயினார் நாகேந்திரனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் பேசி வருவது குறித்தான கேள்விக்கு

இல்லாத ஊருக்கு வழி தேடுவது போல் அவர்கள் பேசி வருகிறார்கள். அதற்கு வாய்ப்பு இல்லை. வரும் தேர்தலில் திமுக தனி பெரும்பான்மை பெறும். கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்ற பேச்சு அடிபட்டு போகும் எனவும் தெரிவித்தார்.