இந்தியாவில் தற்போது பைக் ஓட்ட விரும்புபவர்களை காட்டிலும் ஸ்கூட்டர் ஓட்ட விரும்புபவர்ளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் ஸ்கூட்டர் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் எளிதில் ஓட்டும் வகையில் அமைந்துள்ளது.
Suzuki Access 125
ஹோண்டாவின் ஆக்டிவா, டிவிஎஸ்சின் ஜுபிடர் சக்கைப் போடு போட்டு வரும் சூழலில், அதற்கு சவால்விடும் வகையில் விற்பனையில் அசத்தி வரும் ஸ்கூட்டர் Suzuki Access 125 ஆகும். சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பாக இந்த Suzuki Access 125 உள்ளது.
நகர்ப்புறங்களிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஓட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 124 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது 4 ஸ்ட்ரோக், 1 சிலிண்டர், ஏர் கூல்ட் எஞ்ஜின் ஆகும். மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது ஆகும். ட்யூப்லஸ் டயர் இதில் உள்ளது. இதன் பெட்ரோல் டேங்கர் 5.3 லிட்டர் பெட்ரோல் தாங்கும் வசதி கொண்டது.
விலை என்ன?
சென்னையில் சுசுகி
1. Access 125 Standard Edition-ன் ரூபாய் 1.04 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
2. Access 125 Special Edition ரூபாய் 1.11 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
3. சுசுகி Access 125 Ride Connect Edition ரூபாய் 1.19 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
மைலேஜ் எப்படி?
கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார் செய்யும் வசதி கொண்டது இந்த Suzuki Access 125. லிட்டருக்கு 45 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இதன் சக்கரங்கள் அலாய் சக்கரங்களாக செய்யப்பட்டுள்ளது. 10.2 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1155 மி.மீட்டர் உயரமும், 1835 மி.மீட்டர் நீளமும் கொண்டது ஆகும். 1260 மி.மீட்டர் சக்கரத்தை கொண்டது. இந்த ஸ்கூட்டியின் இருக்கை இருவர் நன்றாக அமர்ந்து பயணிக்க ஏதுவாக 856 மிமீட்டர் அளவு நீளம் கொண்டது. இதில் 12 வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
ப்ளூடூத் இணைத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. டிஸ்ப்ளே நவீன வசதி கொண்டது ஆகும். ஸ்பீடோ மீட்டர் வசதி உள்ளது. பெட்ரோல் குறையும்போது எச்சரிக்கை செய்யும் Low Fuel Warning Lamp உள்ளது. பொருட்களை வைத்துச் செல்ல ஏதுவாக டிக்கி 21.8 லிட்டர் வரை இட வசதி உள்ளது. நவீன வசதி கொண்ட டிஸ்ப்ளேவில் கடிகார வசதியும் உள்ளது. இடங்களை கண்டறிவதற்கான கூகுள் மேப் வசதியும் இதில் உள்ளது.
வாரண்டி:
இதில் செல்போனை சார்ஜ் செய்து கொள்வதற்கான வசதியும் உள்ளது. செல்போனுக்கு ஏதேனும் அழைப்பு அல்லது குறுந்தகவல் வந்தாலும் அலர்ட் செய்யும் வசதி உள்ளது. முகப்பு விளக்குகள் எல்இடி விளக்குகளால் ஆனது. Suzuki Access 125க்கு வாரண்டி 2 வருடம் அளிக்கப்பட்டுள்ளது. அல்லது 24 ஆயிரம் கி.மீட்டர் ஆகும். வெள்ளை, நீலம், கருப்பு, சாம்பல் என 6 வண்ணங்களில் இந்த வாகனம் விற்கப்படுகிறது.
மோசமான சாலைகளிலும் சிரமமின்றி பயணிக்கும் வகையில் இந்த சுசுகி அஸஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆக்டிவா, ஜுபிடருக்கு நிகராக பலரும் இதை விரும்பி வாங்குகின்றனர். இதன் தரமும், பிக்கப்பும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், இதன் ஒவ்வொரு வண்ணங்களும் வசீகரமாகவும் இருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த சுசுகி அஸஸ் வெற்றிகரமாக விற்பனையாகி வருவதைத் தொடர்ந்து விரைவில் இதன் அப்டேட் வெர்சனை சுசுகி வெளியிடும் என்று வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
Car loan Information:
Calculate Car Loan EMI