கடந்த வாரம் திங்கள் கிழமை டாடா மோட்டர்ஸ் பங்குகள் கடுமையாக சரிந்தன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கியமான பிராண்ட் ஜாகுவார் ராண்ட் ரோவர். கடந்த ஜூன் காலாண்டில் இந்த பிராண்டின் விற்பனை நன்றாகவே இருந்தது. அதனால் இந்த பங்கு வேகமாக உயர்ந்தது. ஆனால் உயர்ந்த வேகத்திலே சரிந்தது. அதற்கு காரணம் நடப்பு காலாண்டில் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) இந்த பிராண்டின் விற்பனை மிகவும் குறைவாக இருக்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது. இதனால் டாடா மோட்டார்ஸ் பங்கு கடுமையாக சரிந்தது.
என்ன காரணம்?
இதற்கு முக்கியமான காரணம் சிப் பற்றாக்குறை என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. வாகனங்களுக்கு சிப் தேவை அதிகமாக இருக்கும். அதுவும் உயர் ரக வாகனங்களுக்கு சிப்களின் பங்கு மிகவும் அதிகம். ஆனால் தற்போது அந்த சிப்களின் உற்பத்தி குறைந்திருக்கிறது. அதனால் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது. இதனால் வாகன உற்பத்தி குறைந்திருக்கிறது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது.
ஆட்டொமொபைல் மட்டுமல்லாமல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறன. தவிர கோவிட் காரணமாக எலெட்க்ரானிக்ஸ் டிவைஸ்களுகான தேவை உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பரில் இருந்து சிப் பற்றாக்குறை இருப்பதாக தெரிகிறது. இதனால் எலெட்க்ரானிஸ் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. கம்யூட்டர், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் கடந்த சில மாதங்களாக உயர்ந்திருக்கிறது.
சர்வதேச அளவில் இது முக்கியமான பிரச்சனையாக மாறி இருக்கிறது. உலகம் முழுவதும் சிப்களுக்கான தேவை உயர்ந்திருக்கிறது. ஆனால் சர்வதேச உற்பத்தியில் 80 சதவீதம் ஆசியாவில் இருந்து வருகிறது. தைவான், தென் கொரியா மற்றும் சீனாவில் அதிக உற்பத்தி இருக்கிறது.
தாய்வான் மேனுபேக்சரிங் கம்பெனி மற்றும் சாம்சங் ஆகிய இரு நிறுவனங்கள் சிப் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் வரும் காலத்தில் இந்த நிலை மாறும் என கணிக்கப்பட்டிருக்கிறது. சிப் தயாரிப்புக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. 2030-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு மையமாக சீனா உருவாக திட்டமிட்டிருக்கிறது. அதற்கான அடிப்படை வேலைகளை சீனா செய்துவருகிறது. அதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் சிப் தயாரிக்கும் பணியில் மும்மரமாகி உள்ளன.
பற்றாக்குறை நீடிக்கும்
இந்த பற்றாக்குறை அடுத்த சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றே கணிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக தயாரிப்பை உயர்த்த முடியாத சூழலில் உள்ளன. அதனால் 2023-ம் ஆண்டு வரை இந்த பற்றாக்குறை நீடிக்கும். இதற்கு முக்கிய காரணம் தண்ணீர் பற்றாக்குறை. சிப் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது சிலிகான். ஆனால் இதன் மூலம் தயாரிக்கப்படும் சிப்களுக்கு புராசஸ் அதிகம். தூய்மையான இடத்தில் தூய்மையான காற்று மற்றும் அதிக தண்ணீர் தேவைப்படும். 300-க்கும் மேற்பட்ட செயல்முறைகளுக்கு பிறகுதான் சிப் தயாரிக்கப்படும். 100 சிப் தயாரிப்பதற்கு 8000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
தண்ணீர் பற்றாக்குறை
தாய்வானில் கடும் தண்ணீர் பற்றாக்குறை, அதனால் சிப் தயாரிப்பு குறைதல் இதன் காரணமாக வாகன உற்பத்தி சரிவடைவது பெரும் சுழற்சி இருக்கிறது. சர்வதேச அளவில் தயாரிக்கப்படும் சிப்களில் மூன்றில் இரு மடங்கு தாய்வானில் தயாரிக்கப்படுகிறது. அங்கு 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. தவிர தண்ணீரை பயன்படுத்துவதற்கு விதிமுறைகளை உருவாக்கும் அளவுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
வழக்கமாக தைவான் அதிக மழை பொழியும் நாடுதான். அதன் காரணமாகவே சிப் தயாரிக்கும் ஆலை இங்கு அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை உருவாகி இருப்பது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. தொழிற்சாலைகளுக்கு அதிக நீர் தேவைப்படுதல், மக்களின் பழக்கம், வானிலை மாற்றம், புவியியல் காரணங்களால் மழை குறைவு உள்ளிட்ட அனைத்து காரணங்களால் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. 1964-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் வறட்சி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
தைவான் செமிகண்டக்டர் மேனுபேக்சரிங் நிறுவனம் 2019-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 1.5 மெட்ரிக் டன் தண்ணீரை பயன்படுத்தியது. 2015-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் பயன்படுத்தும் தண்ணீர் அளவு உயர்ந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில் நீர் கிடைக்காததால் லாரிகளில் தண்ணீரை கொண்டுவந்து அதன் பிறகு சிப் தயாரிக்கப்படுகிறது. அதனால் கால தாமதமும் கட்டணமும் உயர்கிறது.
அதனால் இன்னும் சில ஆண்டுகளுக்கு சிப் பற்றாக்குறை இருக்கும். அதனால் ஆட்டோமொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு இருக்கிறது. தவிர சிப் தயாரிக்கும் முறையிலும் மாற்றம் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது. டாடா மோட்டாரில் ஆரம்பித்து தைவானில் முடிந்திருக்கிறது. இந்த கட்டுரை. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் சிப்.
Car loan Information:
Calculate Car Loan EMI