Sony Group Corp மற்றும் Honda Moto இணைந்து வருகிற 2026 ஆம் ஆண்டிற்குள் புதிய மற்றும் நவீன எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தவுள்ளன.
ஹோண்டாவுடன் இணைந்து, சோனி இந்த ஆண்டு ஜூன் மாதம் சோனி ஹோண்டா மொபிலிட்டியை உருவாக்கியது, தற்போது நுகர்வோருக்கான மொபிலிட்டி தீர்வுகளை உருவாக்குவதில் நிறுவனங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. நுகர்வோர் மின்னணுவியல் துறையில் முன்னணி நிறுவனமாக இருப்பது சோனி , அதே போல ஆட்டோமொபைலில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனம் ஹோண்டா. இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக இருக்கும் புதிய வாகனத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் எகிறி கிடக்கின்றன.
சோனி ஹோண்டா மொபிலிட்டியின் வரவிருக்கும் மின்சார கார்கள் பிரீமியம் EV (electric vehicles) பிரிவில் விற்கப்படும். இது வெகுஜன சந்தை நுகர்வுக்கு சிக்கலானதாக இருந்தாலும் கூட , சொகுசு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் பொருட்களை விட விலை குறைவாக இருக்கலாம் என தெரிகிறது. குறிப்பாக அமெரிக்க மற்று ஐரோப்ப நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களை குறி வைத்துதான் இந்த ஸ்கூட்டர்கள் களமிறங்கும். Sony Honda Mobility இன் மின்சார வாகனங்கள் (EV கள்) ஆன்லைன் மூலம் பிரத்தியேகமாக விற்கப்படும் என்று ராய்ட்டர்ஸ் தகவல்கல் தெரிவிக்கின்றன.
கிளவுட் அடிப்படையிலான சேவைகள் மற்றும் காரில் உள்ள பொழுதுபோக்கு தேர்வுகளை உள்ளடக்கிய electric vehicles உள் மென்பொருள் அமைப்பிற்கு Sony பொறுப்பேற்றுள்ளது. மேலும் இது லெவல் 3 இல் தன்னியக்க ஓட்டுதலுக்குத் தேவையான பல்வேறு சென்சார்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுபவம் ஹார்ட்வேர் பார்ட்டிற்கான வேலைகளை செய்கிறது. நிறுவனம் EV சந்தையில் அதன் போட்டியாளர்களை முந்திவிடும் என்று நம்புகிறது, சோனி உடனான கூட்டு இதற்கு பக்க பலமாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. Sony Group Corp மற்றும் Honda Moto இணைந்து உருவாக்கும் வாகனம் வருகிற 2026 ஆம் ஆண்டிற்குள் சந்தைப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.
Car loan Information:
Calculate Car Loan EMI