ஸ்கோடா நிறுவனம் தனது கோடியாக் ஆர்எஸ் காருக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, விரைவில் விற்பனையும் தொடங்க உள்ளது. கோடியாக் ஆர்எஸ் என்பது, அதிக சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உட்பட பல மாற்றங்களுடன் வரும் கோடியாக் காரின், முழுமையாக கட்டமைக்கப்பட்ட (CBU) செயல்திறன் கொண்ட எஸ்யூவி பதிப்பாகும்.

Continues below advertisement

கோடியாக் ஆர்எஸ் ஒரு சில யூனிட்கள் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும். மேலும், இது ஆக்டேவியா ஆர்எஸ்-ஐ விடவும் குறைவான எண்ணிக்கையில் வரக்கூடும். எனவே, இந்தியாவில் 50 யூனிட்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆர்எஸ் மாடலில் 265bhp திறன் கொண்ட 2.0 டர்போ பெட்ரோல் TSI என்ஜினும், ஆக்டேவியா ஆர்எஸ்-ஐ விட அதிகமான 400Nm டார்க் திறனும் இடம்பெற்றுள்ளன. கோடியாக் ஆர்எஸ், 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் AWD ஆகிய தேர்வுகளுடன் வரும்.

செயல்திறன் மற்றும் வடிவமைப்பு மேம்பாடுகள்

எதிர்பார்க்கப்படும் மற்ற மாற்றங்களில், பெரிய பிரேக்குகள், புதிய தோற்றமுடைய முன் மற்றும் பின் பம்பர் கொண்ட புதிய ஸ்டைலிங், புதிய எக்ஸாஸ்ட்கள் மற்றும் பெரிய 20-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.

Continues below advertisement

உட்புறங்களும் முழுமையான கருப்பு நிற கேபினுடன், ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உட்புறம் முழுவதும் ஸ்வேட் துணி மற்றும் சிவப்பு நிற அலங்கார வேலைப்பாடுகள், அத்துடன் ஸ்போர்ட் இருக்கைகளும் இடம்பெறும்.

குறைந்த எண்ணிக்கையில் உயர்தர பதிப்பு

கோடியாக் ஆர்எஸ் குறைந்த எண்ணிக்கையில் வெளிவரவுள்ளது. மேலும், ஒரு எஸ்யூவி-யில் ஆர்எஸ் பேட்ஜ் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன், முதல் முறையாக கோடியாக் ஒரு ஆர்எஸ் பதிப்பையும் பெறுகிறது.

கோடியாக் ஆர்எஸ் ஒரு இறக்குமதி செய்யப்பட்ட மாடல் என்பதால், ஸ்டாண்டர்ட் கோடியாக் மாடலை விட இதன் விலை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் ஆரம்ப விலை 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கோடியாக் ஆர்எஸ் ஒரு தனித்துவமான பிரிவில் நிலைபெற்றிருக்கும். மேலும், அதன் செயல்திறன் மற்றும் தோற்றம் ஆகியவற்றில் அதற்கு போட்டியாளர்கள் இல்லை.

இந்தியாவில் தற்போதுள்ள கோடியாக் வரிசைக்கு மேலாக இந்த புதிய வேரியன்ட் இணையும்போது, ​​கோடியாக் RS குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும்.

 


Car loan Information:

Calculate Car Loan EMI