Skoda Elroq EV: ஸ்கோடா எல்ரோக் மின்சார கார் இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில், ஹுண்டாய் கிரேட்டாவிற்கு போட்டியாக களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது.


ஸ்கோடா எல்ரோக் மின்சார கார்:


ஸ்கோடா நிறுவனம் தனது முற்றிலும் புதிய எல்ரோக் மின்சார எஸ்யூவியை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அந்த பிராண்டின் 'மாடர்ன் சாலிட்' டிசைன் மொழியை அறிமுகம் செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் என்யாக் iV மற்றும் Epiq காம்பாக்ட் EVக்கும் இடையில் நிலைநிறுத்தப்பட்ட,  மிட்சைஸ் SUV ஸ்பேஸில் ஸ்கோடாவின் முதல் மின்சார வாகனம் இதுவாகும். இது ஏற்கனவே ஐரோப்பாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லாவிட்டாலும், ஸ்கோடா அதுதொடர்பாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஸ்கோடா எல்ரோக் வெளிப்புற வடிவமைப்பு


நவீன சாலிட் வடிவமைப்பு லேங்குவேஜ் ஆனது முதன்முதலில் 2022 இல் விஷன் 7S கான்செப்ட்டில் காண்பிக்கப்பட்டது. அதன்படி,  நன்கு அறியப்பட்ட ஸ்கோடா பட்டர்ஃபிளை கிரில் இல்லாமல் போய்விட்டது. அந்த இடத்தில் ஒரு புதிய கருப்பு பேனல் உள்ளது. இது முகத்தின் அகலத்தை விரிவுபடுத்தியதோடு, இரு விளிம்பிலும் நான்கு பிரிக்கப்பட்ட LED விளக்குகளைக் கொண்டுள்ளது. பிரதான முகப்பு விளக்குகள் பம்பரில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும் முகப்பு விளக்கு க்ளஸ்டரில் கீழே இறங்கும் செங்குத்து ஏர் வெண்ட்கள் ஒரு நேர்த்தியான வடிவமைப்பு டச் ஆகும். முன்பக்கத்தில் காற்றின் எதிர்ப்பைக் குறைக்க தானாக மூடப்படும் ஆக்டிவ் கூலிங் வென்ட்களும் உள்ளன.






வழக்கமான ஸ்கோடா பாணியில் எல்ரோக்கின் சுயவிவரம், சுத்தமான கோடுகள் மற்றும் மென்மையான மேற்பரப்புகள், ஒரு பெரிய கண்ணாடி வீடு மற்றும் ஸ்டைலான மல்டி-ஸ்போக் வீல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. டெயில் விளக்குகள் மற்றும் டெயில் கேட் முழுவதும் 'ஸ்கோடா' எழுத்துகள் மற்றும் கீழே வலுவான தோற்றமளிக்கும் இரட்டை-டோன் பம்பர் உள்ளது.  பாரம்பரிய ஸ்கோடா லோகோ இல்லாமல் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ள முதல் மாடல் எல்ரோக் ஆகும். பழைய லோகோவிற்குப் பதிலாக, இது பானட், டெயில்கேட் மற்றும் உள்ளே உள்ள ஸ்டீயரிங் ஆகியவற்றில் 'ஸ்கோடா' என எழுதப்பட்டுள்ளது.


ஸ்கோடா எல்ரோக் இன்டீரியர் மற்றும் அம்சங்கள்


உட்புறத்தில், எல்ரோக் சிறகு வடிவமைப்பு கொண்ட டாஷ்போர்டிற்கான தாக்கத்தை என்யாக்கிலிருந்து பெற்றுள்ளது. மேலும், அதே 13-இன்ச் சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறது. டிரைவ் மோட்கள், காலநிலை கட்டுப்பாடுகள் மற்றும் பிற செயல்பாடுகளுக்கு ஷார்ட்கட்டாக பட்டன்களும் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஸ்டீயரிங் மற்றும் அதன் பின்னால் ஒரு நேர்த்தியான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. 48-லிட்டர் இடத்தை வழங்கும் பல ஸ்மார்ட் இன்-கேபின் சேமிப்பு பெட்டிகளை பெற்றுள்ளது. 470-லிட்டர் பூட் கெபாஷிட்டியை கொண்டுள்ளது.


ஸ்கோடா எல்ரோக் பவர்டிரெய்ன் & வரம்பு:


எல்ரோக் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் இந்த கார், மூன்று விதமாக்ன பேட்டரி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. எண்ட்ரி லெவல் 50 பேட்டரி ஆப்ஷன் ஆனது 52kWh பேட்டரி பேக் மற்றும் 170hp பின்புறத்தில் பொருத்தப்பட்ட மோட்டாரைப் பெறுகிறது. இது 370km ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது. 60 பேட்டரி ஆப்ஷன் ஆனது 59kWh மற்றும் 204hp மோட்டாருடன்,  385km ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது. வரம்பில்-டாப் ஸ்பெக் ஆன 85 ஆப்ஷனானது,  பெரிய 77kWh பேட்டரி பேக் மற்றும் 285hp மோட்டாருடன், ஒரு சார்ஜ் ஒன்றுக்கு 560km ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது.ஸ்கோடா 0-100 கிமீ வேகத்தை 6.6 வினாடிகளில் (85 பதிப்பு) மற்றும் அதிகபட்சமாக 180 கிமீ வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..


ஸ்கோடா எல்ரோக் இந்தியா அறிமுக விவரங்கள்:


ஸ்கோடா இந்தியா எல்ரோக்கை உள்நாட்டு சந்தைக்கு கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறது. இது அறிமுகப்படுத்தப்பட்டால், டாடா கர்வ்வ் EV, வரவிருக்கும் ஹூண்டாய் கிரேட்டா EV மற்றும் மாருதி eVX போன்றவற்றிற்கு போடியாக இருக்கும். இங்கிலாந்தில் எல்ரோக் கார் மாடலின் விலை, இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI