இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் தயாரிப்பதில் முன்னணி கார் மற்றும் பைக் நிறுவனங்கள் இறங்கி வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள் விற்பனையிலும் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

சிம்பிள் ஒன் இ ஸ்கூட்டர்:

தற்போது ஓலா, ஏதர் நிறுவனத்திற்கு போட்டியாக இ ஸ்கூட்டர் தயாரிப்பில் இயங்கி வருவது சிம்பிள் ஒன். இந்த சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் தனது போட்டி நிறுவனங்களின் சவாலை சமாளிப்பதற்காக அதிக மைலேஜ் தரும் இ ஸ்கூட்டரை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களது சிம்பிள் ஒன் ஜென் 1.5 ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 248 கி.மீட்டர் தொலைவிற்கு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

248 கி.மீட்டர் பறக்கலாம்:

தொடக்கத்தில் இது 212 கி.மீட்டர் தொலைவிற்கு செல்லும் வகையில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 248 கி.மீட்டர் தொலைவிற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டரில் 5 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பீக் பவராக 8.5 கிலோவாட் உள்ளது. 

சிறப்பம்சம் என்னென்ன?

டாப் ஸ்பீடாக மணிக்கு 105 கி.மீட்டர் வேகத்தை இந்த ஸ்கூட்டர் எட்டும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்ர் 72 என் எம் டார்க் திறன் கொண்டது. இந்த வண்டியில் சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் பொருட்கள் வைப்பதற்கான டிக்கியும் பெரி்யளவு வைக்கப்பட்டுள்ளது. அதாவது 30 லிட்டர் இட வசதி அளிக்கப்பட்டுள்ளது.  

மேலும், சார்ஜ் போடுவதற்கான வசதியும் இந்த இ ஸ்கூட்டரில் உள்ளது. கருப்பு மட்டுமின்றி சிவப்பு, பழுப்பு, வெள்ளை, கருஞ்சிவப்பு மற்றும் வெள்ளை கலந்த சிவப்பு ஆகிய வண்ணங்களிலும் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. ஜிபிஎஸ் வசதி கொண்ட திரையும் இந்த ஸ்கூட்டரில் உள்ளது. இதன் மூலம் கூகுள் மேப்,  வண்டியில் எஞ்சியிருக்கும் சார்ஜ், வண்டியின் வேகம் உள்ளிட்ட பலவற்றையும் அறிந்து கொள்ள இயலும்.

விலை எவ்வளவு?

5 கிலோவாட் பேட்டரி கொண்ட சிம்பிள் ஒன் இ ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோ ரூம் விலை ரூபாய் 1.72 லட்சம் ஆகும். 3.7 கிலோ வாட் பேட்டரி திறன் கொண்ட சிம்பிள் ஒன் இ ஸ்கூட்டர் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 1.40 லட்சம் ஆகும். இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 181 கிலோ மீட்டர் வரை செல்லும். பேட்டரியை தனியாக அகற்றிக் கொள்ளும் வகையில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வாகனத்தில் இருக்கும்போதுதான் பேட்டரியை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களை கவரும் நோக்கத்தில் நல்ல மைலேஜ் தரும் வகையில் இந்த சிம்பிள் ஒன் இ ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளனர். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் ஷோ ரூம்கள் இந்தியா முழுவதும் பல இடங்களில் உள்ளது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சிம்பிள் ஒன் இ ஸ்கூட்டர் விற்பனையாகியுள்ளது.

தற்போது மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இறங்கியுள்ளன. டாடா, ஹுண்டாய், டொயோட்டா, மஹிந்திரா, மாருதி சுசுகி போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது மின்சார கார் தயாரிப்பிலே முழு வீச்சில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI