இந்தியாவில் இ ஸ்கூட்டர்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மின்சார வாகன சந்தையைப் பிடிப்பதற்கு ஒவ்வொரு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வரும் சூழலில், Simple Energy நிறுவனம் ஒரு தவிர்க்க முடியாத நிறுவனமாக உருமாறி வருகிறது.
மைலேஜ் அதிகம் தரும் இ ஸ்கூட்டர் என்று எடுத்துக்கொண்டால் இந்த Simple Energy இ ஸ்கூட்டர்களை தவிர்க்கவே முடியாது. இவர்களின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.
1. Simple Energy One Gen 2:
இந்த Simple Energy One Gen 2 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 2 லட்சத்து 6 ஆயிரத்து 99 ஆகும். ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே இதில் உள்ளது. இந்த Simple Energy One Gen 2 இ ஸ்கூட்டர் 236 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 72 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் ஆகிறது.
2. Simple Energy Ultra:
இந்த Simple Energy Ultra இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 2 லட்சத்து 51 ஆயிரத்து 742. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் அதிகபட்சமாக 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் 6.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 72 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
3.Simple Energy One S Gen 2:
இந்த Simple Energy One S Gen 2 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 77 ஆயிரத்து 119. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 190 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வரை வேகத்தில் செல்லலாம். 3.7 கிலோவாட் பேட்டரி ஆற்றல் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5.54 மணி நேரம் ஆகிறது,
இந்த இ ஸ்கூட்டர் மட்டுமின்றி விரைவில் Simple Energy Arrive என்ற இ ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்த உள்ளார். இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம்
இந்த இ ஸ்கூட்டர்கள் அனைத்தும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி வாரண்டி 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை அளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாரண்டி 3 வருடம் ஆகும். ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன், யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது.
Car loan Information:
Calculate Car Loan EMI