மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் காெண்டே இருக்கிறது. ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பல இரு சக்கர வாகனங்களும் இந்திய சந்தையில் இடம்பிடிக்க பல்வேறு வாகனங்களைத் தயாரித்து வருகின்றனர்.

Continues below advertisement

விலை என்ன? 

Hop நிறுவனத்தின் இ ஸ்கூட்டர் Hop Electric LEO. இந்த Hop Electric LEO இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 89 ஆயிரத்து 34 ஆகும். இதில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது.

1.LEO Basic - ரூபாய் 89 ஆயிரத்து 34

Continues below advertisement

2. LEO Extended - ரூபாய் 1 லட்சத்து 3 ஆயிரத்து 905

மைலேஜ்:

இந்த இ ஸ்கூட்டரின் முதல் வேரியண்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். முதல் வேரியண்டில் 1.44 கிலோவாட் பேட்டரி அளிக்கப்படுகிறது. 90 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

இந்த LEO Extended இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 52 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் 2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 125 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 

நிறங்கள்:

சார்ஜ் செய்வதற்கு 3.30 மணி நேரம் ஆகிறது. இதன் எடை 77 கிலோ மற்றும் 80 கிலோ ஆகும். இருக்கை உயரம் 800 மி.மீட்டர் ஆகும். எகோ, பவர் மற்றும் ஸ்போர்ட் மோட்கள் உள்ளது. வெள்ளை, சாம்பல், சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது. 

பிஎம்எஸ்எம் ஹப் மோட்டார்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெயிலிபிட்டி வசதி கொண்டது. 550 வாட் சார்ஜர் அவுட்புட் வசதி கொண்டது. சிபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் கொண்டது. 2 பிஸ்டன் காலிபர் வசதி கொண்டது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

முன்பக்கம் 10 இன்ச் சக்கரங்களும், பின்பக்கம் 10 இன்ச் சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அப்ரைட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. கிரவு்ண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் ஆகும்.

160 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. 3 வருடம்  அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி கொண்டது. மோட்டார் வாரண்டி 3 வருடம் கொண்டது. டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.  ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதி கொண்டது.

ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீ்ம் இண்டிகேட்டர் வசதி கொண்டது. மணி பார்க்கும் வசதி கொண்டது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி கொண்டது. ரிவர்ஸ் மோட் பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி கொண்டது.

எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் எல்இடி ஆகும். எல்இடி விளக்குகள் உள்ளது. டிக்கி வசதி 17 லிட்டர் ஆகும். பில்லியன் சீட் வசதி உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI