இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஓலா, ஏதர் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவில் வளர்ந்து வரும் நிறுவனமாக திகழ்வது சிம்பிள் எனர்ஜி திகழ்கிறது.
Simple Energy Arrive எப்போது அறிமுகம்?
இவர்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள இ ஸ்கூட்டர் Simple Energy Arrive. இந்த இ ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் வெளியானது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது. இந்த சூழலில் இந்த Simple Energy Arrive இ ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகமாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 2ம் தேதி Simple Energy Arrive இ ஸ்கூட்டர் அறிமுகமாகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
மைலேஜ்:
இந்த Simple Energy Arrive இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1.84 லட்சம் ஆகும். இந்த இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 180 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த இ ஸ்கூட்டரின் பரிசோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
சிறப்புகள்:
குடும்ப பயன்பாட்டை குறிவைத்து அறிமுகமாக உள்ள இந்த Simple Energy Arrive இ ஸ்கூட்டர் 12 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்வின் பின்பக்க ஷாக் அப்சார்பர் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டரின் எத்தனை கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது? என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
விலை:
இந்த இ ஸ்கூட்டர் ஏதர் ரிஸ்டா, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பிள் எனர்ஜி Simple Energy One Gen 2, Simple Energy Ultra மற்றும் Simple Energy One S Gen 2 இ ஸ்கூட்டர்களுக்கு ஏற்கனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI