Royal Enfied Hybrid Motorcycle: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 50+ கிமீ மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

Continues below advertisement

ராயல் என்ஃபீல்ட் ஹைப்ரிட் மோட்டர்சைக்கிள்:

இந்திய பைக் சந்தையில் எண்ட்ரி லெவல் பிரீமியம் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் திட்டமிடுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த CFmoto நிறுவனத்துடன் இணைந்து ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 250சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிளை கொண்டு வர பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். ஹண்டர் 350 மாடல் மோட்டார்சைக்கிளுக்கு கீழே நிலைநிறுத்தப்பட உள்ள புதிய பைக்கின் விலை, ரூ.1.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கூடுதல் விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகாவிட்டாலும், புதிய ஹைப்ரிட் மோட்டார்சைக்கிளானது லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. தற்போது வரை எந்தவொரு ராயல் என்ஃபீல்ட் பைக்கும் இத்தகைய மைலேஜை தந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹண்டர் 350 மாடல் 36 முதல் 40 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதே சிறந்ததாக உள்ளது.

ஹைப்ரிட் இன்ஜின் வடிவமைப்பு:

புதிய 250cc  ஹைபிரிட் பவர்ட்ரெயின் ஆனது, இந்தியாவில் தற்போது அமலில் உள்ள பிஎஸ்-6 உமிழ்வு விதிகளை பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது. விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக கூறப்படும் சராசரி எரிபொருள் திறன் விதிகளையும் பூர்த்தி செய்யம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. CFmoto நிறுவனத்தின் 250cc இன்ஜின் ஆனது காம்பேக்ட், சிறந்த மைலேஜ் திறன் மற்றும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்திற்கு பொருந்தக்கூடியதாகும். இரண்டு நிறுவனங்களும் தொழில்நுட்ப ரீதியான கூட்டணியாக மட்டுமே இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், ராயல் என்ஃபீல்ட் மற்றும் CFmoto கிராஸ்ஓவர் வாகனங்கள் எதுவும் வராது என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2026ம் ஆண்டு வெளியாக உள்ளது. இன்ஜினை தவிர  சேசிஸ், ஸ்டைலிங் மற்றும் சஸ்பென்ஷன் தொடர்பான அனைத்து பணிகளையும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனமே மேற்கொள்கிறது. புதிய 250 சிசி பைக்கிற்கான பிளாட்ஃபார்ம் V என்ர கோட்நேமில் குறிப்பிடப்படுகிறது.

Continues below advertisement

ஹைப்ரிட் இன்ஜின் ஏன்?

அதிகப்படியான எடையை கருத்தில் கொண்டே ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஹைப்ரிட் இன்ஜின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகப்படியான எடை என்பது சுறுசுறுப்பாகவும், எளிதில் கையாள்வதாகவும் இருக்க வேண்டிய பைக்குகளுக்கு பிரச்னையாக உள்ளது.  இந்நிலையில் தான் ஹைப்ரிட் மாடல்களானது காம்பேக்ட் பேட்டரி மற்றும் குறைந்த எடையிலான பேட்டரிகள் மூலம் செயல்திறனை மேம்படுத்துகின்றன. இவை எடை கூடுவதை நிர்வகிப்பதோடு, நகர்ப்புறங்களில் சிறந்த எரிபொருள் செயல்திறன் மற்றும் உமிழ்வு விதிகளை பூர்த்தி செய்யவும் ஹைப்ரிட் மாடல்கள் உதவுகின்றன.  மோட்டார்சைக்கிள்களில் குறிப்பாக ராயல் என்ஃபீல்ட் ஆதிக்கம் செலுத்தக் கூடிய, 250சிசி முதல் 650சிசி ரேஞ்ச் வரையிலான செக்மெண்டில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை புகுத்துவது, சமநிலை மற்றும் பயண அனுபவத்தை மேம்படுத்த பெரும் பங்காற்றும். எடை கூடினாலும் நல்ல மைலேஜை பெற முடியும்.

ராயல் என்ஃபீல்ட் இலக்கு:

சென்னையை மையமாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனமானது, 100-150 சிசி பைக்கிலிருந்து முதல்முறையாக பிரீமியம் பைக்கை நோக்கி நகரும் பயனாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் நோக்கில் புதிய வாகனத்தை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரகடத்தில் உள்ள ஆலையை ஹைப்ரிட் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது. குறைந்த விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, புதிய வாகனத்தை 85-90 சதவிகிதம் வரை உள்நாட்டிலேயே தயாரிக்க ராயல் என்ஃபீட்ல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உற்பத்தியை பெருக்க திட்டம்:

தற்போது ஆண்டிற்கு 10 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து வரும் இந்தியா, 2030ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 20 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய 250சிசி மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி, 750சிசி இன்ஜின் கொண்ட வாகனத்தை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. நடப்பாண்டு இறுதியில் இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும், தனது துணை நிறுவனமான Flying Flea மூலம், Flying Flea C6 எனப்படும் முதல் மின்சார பைக்கையும் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI