இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனமாக திகழ்வது ராயல் என்ஃபீல்ட். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. சாலைகளில் கம்பீரமாக செல்வதற்கு ராயல் என்ஃபீல்ட் இரு சக்கர வாகனம் சிறந்த இரு சக்கர வாகனமாக திகழ்கிறது.

Continues below advertisement

அதிக மைலேஜ்:

மற்ற தினசரி பைக்குகளுடன் ஒப்பிடும்போது ராயல் என்ஃபீல்ட் பைக்கில் மைலேஜ் குறைவு ஆகும். ஆனாலும், அதன் கம்பீரம் மற்றும் தரத்திற்காகவே ராயல் என்ஃபீல்ட் அனைவராலும் கவரப்படுகிறது. ராயல் என்ஃபீல்ட் பைக்கிலே அதிக மைலேஜ் தரும் பைக் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Royal Enfield Classic 350:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் Royal Enfield Classic 350 பைக் அதிக மைலேஜ் அளிக்கும் ராயல் என்ஃபீல்ட் பைக்காக உள்ளது. இந்த பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 23 ஆயிரத்து 308 ஆகும். இதில் மொத்தம் 6 வேரியண்ட் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 2 லட்சத்து 23 ஆயிரத்து 308. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 65 ஆயிரத்து 311. 349 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட இந்த பைக் 35 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 5 கியர்கள் உள்ளது. 195 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது.

Continues below advertisement

2. Royal Enfield Hunter 350:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனம் Royal Enfield Hunter 350. இந்த பைக்கில் 4 வேரியண்ட் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 65 ஆயிரத்து 559. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 3 ஆயிரத்து 310. இதில் 349.34 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர் உள்ளது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. இது 36.2 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

3. Royal Enfield Bullet 350:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற பைக் Royal Enfield Bullet. இதன் அப்டேட் வெர்சன் Royal Enfield Bullet 350 ஆகும். இதில் 4 வேரியண்ட் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 97 ஆயிரத்து 189. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 46 ஆயிரத்து 773. இதில் 349 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 35 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

மற்ற பைக்குகள் 25 கிலோமீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. முன்பைக் காட்டிலும் தற்போது ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பல மாடல் இரு சக்கர வாகனங்களின் எடையை குறைத்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் அனைத்து ரக பைக்குகளுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI