இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக, மின்சார ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்து வருகிறது. 

Continues below advertisement

அடுத்த மாதம் அறிமுகம்:

இந்தியாவைப் பொறுத்தமட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றான இரு சக்கர வாகனங்களை அதிகளவு மக்கள் விரும்பத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் புகழ்பெற்ற இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் மின்சார வாகன தயாரிப்பில் அசத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களும் அசத்தி வருகின்றனர்.

இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள மின்சார ஸ்கூட்டர் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

1. TVS Jupiter Electric:

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் TVS Jupiter. இதன் மின்சார வேரியண்டாக TVS Jupiter Electric இ ஸ்கூட்டர் மும்முரமாக தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், இந்த TVS Jupiter Electric மின்சார ஸ்கூட்டர் அடுத்த மாதமான ஆகஸ்டில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. 

இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். அடுத்த மாதம் அறிமுகம் என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.  இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமானால் இந்திய சந்தையில் டிவிஎஸ் இன்னும் நங்கூரமாக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் என்று கருதப்படுகிறது.

2. Ather EL Scooter:

இந்தியாவில் மின்சார வாகனங்களின் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் நிறுவனம் ஏதர். இவர்களின் இ ஸ்கூட்டர்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு இருந்து வருகிறது. ஏதர் நிறுவனத்தின் இ ஸ்கூட்டர் விற்பனை சக்கைப் போடு போட்டு வரும் சூழலில், அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள இ ஸ்கூட்டர் Ather EL Scooter. இந்த இ ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகும் என்று கருதப்படுகிறது. 

இதன் விலை ரூபாய் 90 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பச்சை - வெள்ளை கலந்த வண்ணத்தில் இந்த இ ஸ்கூட்டர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமானால் ஏதர் நிறுவனம் மேலும் கோலோச்சும் என்று கருதப்படுகிறது.

இந்த இ ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி சுசுகி பர்க்மன் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், சிம்பிள் எனர்ஜி அர்ரைவ், வின்ஃபாஸ்ட் வெரோ எக்ஸ் ஆகிய இ ஸ்கூட்டர்கள் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ளது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI