Royal Enfield Interceptor vs Bear 650: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் இன்டர்செப்டர் 650 மற்றும் பியர் 650 மோட்டார் சைக்கிள்களில் எது சிறந்தது என ஒப்பிட்டு அறியலாம்.

Continues below advertisement

ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் 650 Vs பியர் 650:

ராயல் என்ஃபீல்டின் முயற்சி மற்றும் சோதனை செய்யப்பட்ட 648சிசி இரட்டை சிலிண்டர் இன்ஜினை பயன்படுத்தும் ஐந்தாவது பைக் மாடல் பியர் 650 ஆகும். பியர் என்பது இன்டர்செப்டரை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்க்ராம்ப்ளர் மோட்டார் சைக்கிள்.  எனவே இந்த இரண்டு பைக்குகளுக்கு இடையே உள்ள அனைத்து ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் கீழே பட்டியலிடப்பட்டுஇள்ளன.

இன்டர்செப்டர் 650 Vs பியர் 650: இன்ஜின்

இரண்டு பைக்குகளையும் இயக்கும் இன்ஜின் ஒரே மாதிரியாக இருந்தாலும், பியர் டூ-இன்-ஒன் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்திய முதல் பைக் ஆகும். இதன் விளைவாக, ராயல் என்ஃபீல்டின் புதிய பைக் கொஞ்சம் கூடுதல் டார்க்கை வெளியேற்ற முடிகிறது. அதன்படி பியர் மாடலில் உள்ள இன்ஜின் 56.5Nm முறுக்குவிசையை உருவாக்குகிறது. இது இன்டர்செப்டரை விட 4Nm அதிகமாகும்.

Continues below advertisement

பியர் vs இன்டர்செப்டர்: சேஸ் & டைமன்ஷன்ஸ்:

பியரில் உள்ள சேஸ் பார்வைக்கு இன்டர்செப்டரில் உள்ளதைப் போலவே உள்ளது. ஆனால், லேசான ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்காக பியர் மாடலின் சேஸ் பகுதி பலப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு வித்தியாசம் பியர் 650 இல் அண்டர்பின்னிங்ஸ்  என்பது முற்றிலும் புதியது ஆகும். பியர் மாடலில் ஷோவா USD ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் இருக்க, டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும்  கேஸ் சார்ஜ் செய்யப்பட்ட டிவின் ஷாக் அப்சார்பர்கள் இன்டர்செப்டரில் வழங்கப்பட்டு உள்ளது. இன்டர்செப்டரின் 110மிமீ/88மிமீ (முன்/பின்புறம்) உடன் ஒப்பிடும்போது பியர் இரண்டு முனைகளிலும் 130மிமீ/115மிமீ (முன்/பின்புறம்) பயணத்தை அதிகரித்துள்ளது.

பியரின் சக்கர அளவுகள் மற்றும் டயர்களும் வேறுபட்டவை. இது இன்டர்செப்டரின் 18-இன்ச் விளிம்புகள் மற்றும் சியட் டயர்களுடன் ஒப்பிடும்போது புத்தம் புதிய MRF நைலோரெக்ஸ் டயர்களுடன் கூடிய ஸ்போக் 19/17-இன்ச் வீல்ஸ் ஷோடில் இயங்குகிறது. பியரில் டியூப்லெஸ் வீல் ஆப்ஷன் இல்லை. அதே சமயம் இன்டர்செப்டரில் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருப்பதால்,  அது டியூப்லெஸ் டயர்களில் இயங்கும்.

பியர் 830மிமீ இருக்கை உயரத்துடன் 216கிலோ எடையும், 184மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸையும் கொண்டுள்ளது. இதற்கிடையில், இன்டர்செப்டரின் எடை 218கிகி, மற்றும் 804மிமீ இருக்கை உயரம் மற்றும் 174மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை பெற்றுள்ளது. 

பியர் vs இன்டர்செப்டர்: அம்சங்கள்

பியர் 650, கெரில்லா மற்றும் ஹிமாலயனில் காணப்படும் TFT டேஷைப் பயன்படுத்தும் முதல் 650cc ராயல் என்ஃபீல்டு ஆகும். இந்த டிஸ்ப்ளே புளூடூத் இணைப்பைக் கொண்டுள்ளது. கூகுள் மேப்ஸையும் திரையில் காணலாம். இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்டல் ஜிடி இரண்டிலும் காணப்படும் அழகான டிஜி-அனலாக் டயல்களில் இருந்து, புதிய டிஸ்ப்ளேவானது அம்சங்கள் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் ஒரு பெரிய மேம்படுத்தல் ஆகும். பியர் அனைத்து LED விளக்குகளையும் ஸ்டேண்டர்டாக கொண்ட முதல் RE 650 ஆகும். பியரில் உள்ள இண்டிகேட்டர்கள் ஹிமாலயன் மற்றும் கெரில்லாவிலும் காணப்படுகின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI