இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்திய சாலைகளை இவர்களது வாகனம் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

Continues below advertisement

Royal Enfield Himalayan 750:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள இரு சக்கர வாகனம் Royal Enfield Himalayan 750. இந்த பைக் நடப்பாண்டில் அறிமுகமாகும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த பைக் வரும் நவம்பர் மாதம் உலகச் சந்தையில் அறிமுகமாகும் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.

வசதிகள்:

இந்த பைக்கில் 749 சிசி பாரல்லல் ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 270 டிகிரி க்ராங்ஷாப்ட் வசதி உள்ளது. டூயல் ஓவர்ஹெட் காம்ஷாப்ட்ஸ் உள்ளது. எலக்ட்ரானிக் ப்யூல் இன்ஜெக்ட் வசதி எஞ்ஜினில் உள்ளது. 6 கியர்கள் உள்ளது. சிலிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதி உள்ளது.  

Continues below advertisement

55 முதல் 55 பிஎச்பி குதிரை ஆற்றல் உள்ளது. 60 முதல் 65 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். அப்சைட் டவுன் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கம் உள்ளது. பின்பக்கம் மோனோஷாக் வித் அட்ஜஸ்டபிள் ப்ரிலோட் சஸ்பென்சன் வசதி உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. சுவிட்சபிள் ரியர் ஏபிஎஸ் வசதி உள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் சில வேரியண்ட்களில் பொருத்தப்பட உள்ளது. 21 இன்ச் முன்பக்க சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்படுகிறது. 

சிறப்புகள்:

பெட்ரோல் டேங்கர் 20 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது. அட்ஜஸ்டபிள் விண்ட்ஸ்கிரின் வசதி உள்ளது. பீக் ஸ்டைல் மட்கார்ட், வட்ட வடிவமான எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. லக்கேஜ் ரேக், மிகப்பெரிய பேஷ் ப்ளேட், அகலமான ஹேண்ட்ள்பார், எஞ்ஜின் கார்ட்ஸ் ஆகிய வசதிகள் உள்ளது. டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ள இந்த Royal Enfield Himalayan 750 பைக்கில் ப்ளூடூத் வசதி உள்ளது. கால் அலர்ட், ரைட் அனலடிக்கிள்ஸ் வசதி உள்ளது. 

ஆஃப்ரோட் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த பைக் அறிமுகமானால் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது. எல்இடி இண்டிகேட்டர் வசதிகள், எல்இடி டெயில் விளக்குகள் வசதி உள்ளது. ஆஃப் ரோட் பைக்கான இந்த பைக்கின் விலை ரூபாய் 4.50 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI