அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிப்பில் வெளியாகியுள்ளடிசிதிரைப்படம் முதல் நாளிலேயே வசூலில் கவனம் ஈர்த்துள்ளது. ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், இந்தியாவில் முதல் நாளில் ரூ.4.10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ரூ.5.70 கோடி வசூலை ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்ப் பதிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Continues below advertisement

டிசிபடத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் கதாபாத்திரத்திலும், வாமிகா கபி சந்திரா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

பாசிட்டிவ் விமர்சனங்கள்

படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் ஆரம்பகட்ட விமர்சனங்களில் லோகேஷ் கனகராஜின் நடிப்பு முக்கியமாக பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரது நடிப்பு இயல்பாகவும், கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் அருண் மாதேஸ்வரனின் மேக்கிங் ஆகியவையும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

Continues below advertisement

பாராட்டுக்களை அள்ளும் லோகேஷ் கனகராஜ் 

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சில ஆண்டுகளிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என முன்னணி நடிகர்களை வைத்து பெரிய அளவிலான திரைப்படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.

இந்நிலையில், இயக்குநராக வெற்றி பெற்ற ஒருவர் திடீரென கதாநாயகனாக களமிறங்குவதாக அறிவித்தபோது, அவர்மீதும் அவரது நடிப்பின் மீதும் பல விமர்சனங்கள் எழுந்தன. நடிப்பில் லோகேஷால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்வியும் இருந்தது.

ஆனால்டிசிவெளியான பிறகு அந்த சந்தேகங்களுக்கு அவரது நடிப்பு பதில் அளித்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தேவதாஸ் கதாபாத்திரத்தில் அவர் காட்டிய இயல்பான நடிப்பு படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. இயக்குநராக ஏற்கெனவே உயரத்தை தொட்ட லோகேஷ், தற்போது நடிகராகவும் தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருப்பதுடிசிபடத்தின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.