Royal Enfield guerrilla 450: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் கெரில்லா 450 மாடல் மோட்டார்சைக்கிள், பார்சிலோனாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 பைக்:


ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய கெரில்லா 450 மாடல் மோட்டார்சைக்கிள், வரும் ஜூலை 17 ஆம் தேதி பார்சிலோனாவில் வைத்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்தகவலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த்த லால் மற்றும் தலைமை செயல் அதிகாரி கோவிந்தராஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த மோட்டார்சைக்கிளின் அறிமுகத்தை பெரிதும் எதிர்பார்த்து இருந்த, வாகன பிரியர்களிடையே ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தின் அறிமுகத்தால், ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் 450சிசி செக்மெண்ட் மேலும் விரிவடைய உள்ளது.


ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 விவரங்கள்:


வாகனத்தின் சோதனை ஓட்டங்களின் போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படங்கள்,  வரவிருக்கும் கெரில்லா 450 இல் உள்ள வன்பொருளைப் பற்றி ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன. அதன்படி,  சிங்கிள்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், வட்டமான எல்இடி முகப்பு விளக்கு, கணிசமான எரிபொருள் டேங்க் மற்றும் ஒரு துண்டு இருக்கை போன்ற அம்சங்களை புதிய வாகனம் கொண்டிருக்கிறது. 


சிங்கிள்-பாட் கன்சோல், ஹிமாலயனில் கிடைக்கும் TFT டிஸ்ப்ளே போன்றே இருக்குமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எரிபொருள் டேங்க் மற்றும் வாகனத்தின் பின் பகுதிகள் ஹிமாலயன் 450 உடன் ஒத்திருக்கிறது. அதாவது இது ஒரு கேரிஓவர் வடிவமைப்பைக் குறிக்கிறது. ஹிமாலயன் ஸ்போக் வீல்கள் மற்றும் டியூப் டயர்களைப் போல் அல்லாமல், புதிய பைக்கில் அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இது ஹிமாலயனில் காணப்படும் USD ஃபோர்க்கிற்குப் பதிலாக ஒரு கைடர் டெலஸ்கோபிக் ஃபோர்க்கைக் கொண்டுள்ளது.


ஹிமாலயன் அம்சங்கள் பகிர்வு:


கூடுதலாக, ஹிமாலயனில் இடம்பெற்றுள்ள அதே ஷெர்பா 450 இன்ஜினையே, புதிய கெரில்லா 450 வாகனமும் பயன்படுத்துகிறது. கெரில்லா 450 இன் இன்ஜினின் டியூனிங் உறுதி செய்யப்பட உள்ளது. ஹிமாலயனில் உள்ள 452சிசி ஒற்றை சிலிண்டர் இன்ஜின்,  40எச்பி மற்றும் 40என்எம் டார்க்கை உருவாக்கும் திறனை கொண்டுள்ளது.  மேலும் இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 


பைக்கின் உறுதியான உருவாக்கம் மற்றும் திறமையான கையாளுதல் ஆகியவை டார்மாக் மற்றும் லேசான ஆஃப்-ரோட் பாதைகளில் சமமாக சிலிர்க்க வைக்கிறது. கெரில்லா 450 உண்மையில் ஹிமாலயன் 450 ஐ விட சிறந்த செயல்திறனை வழங்க முடியும். காரணம் இது குறைந்த கர்ப் எடையைக் கொண்டிருக்கும். ரைடிங் பணிச்சூழலியல் குறைந்த இருக்கை உயரம் மற்றும் மையமாக நிலைநிறுத்தப்பட்ட ஃபுட்பெக்குகளுடன் மிகவும் வசதியாக உள்ளது.


விலை விவரங்கள்:


ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450, ட்ரையம்ப் ஸ்பீட் 400, ஹீரோ மேவ்ரிக் 440, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாளர்களுக்கு இருக்கும் என கருதப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.2.3 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். 


Car loan Information:

Calculate Car Loan EMI