பல்சர்-க்கு ஒரு பொல்லாதவன்னா, ராயல் என்ஃபீல்ட் பைக்குகளுக்கு கௌதம் வாசுதேவ் மேனன் படங்கள்தான். சொல்லப்போனால் ராயல் என்ஃபீல்ட், ஒரு லாங் ட்ரிப் இதையெல்லாம் இளைஞர்கள் மத்தியில் இன்னும் பிரபலப்படுத்தியதில் கௌதம் மேனனோட படங்களுக்கு ஒரு பெரிய பங்குண்டு.
புல்லட் 350 vs கிளாசிக் 350:
கௌதம் மேனன் படம் பார்த்துவிட்டு நேராக ராயல் என்ஃபீல்ட் ஷோரூம் போனால் லேசான ஹார்ட் அட்டாக் கூட வரலாம்.. ஏனென்றால் கிளாசிக் 350-ன் ஆன்ரோட் விலை ₹2,17,000/- முதல் ₹2,49,000/- வரை. டெஸ்ட் டிரைவ் செய்தவர்களில் வாங்க முடியாத ஏக்கத்துடன் வீடு திரும்பியவர்கள்தான் அதிகம்.ராயல் என்ஃபீல்ட் பைக்தான் வேண்டும் ஆனால் விலை குறைவாக இருக்க வேண்டும் என்று ஏங்கியவர்களுக்கான பைக்தான் "புல்லட் 350". வெகுகாலமாக விற்பனையில் இருந்தாலும் பலர் கிளாசிக் 350-ஐ புல்லட் 350-யுடன் குழப்பிக்கொள்வார்கள். தோற்றத்திலும் இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லைதான், ஆனால் பில்ட் க்வாலிட்டி என்று வரும்போது கிளாசிக் 350 தான் பெஸ்ட்.
கிளாசிக் 350-ஐ விட புல்லட் 350-ன் விலை ஏறக்குறைய ₹ 39,000/- ரூபாய் குறைவு. ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350-ன் சென்னை ஆன்ரோட் விலை ₹ 1,78,000-லிருந்து துவங்குகிறது.இதன் கிக் ஸ்டார்ட் வேரியண்டின் விலை ₹ 1,78,400/- (சென்னை ஆன்ரோட்), எலக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்டின் விலை ₹ 1,87,800/- (சென்னை ஆன்ரோட்).
கிளாசிக் 350-யுடன் ஒப்பிடும்போது புல்லட்டின் பின் சக்கரம் ஒல்லியான டயரையும் ட்ரம் பிரேக்கையும் கொண்டிருக்கும். பில்ட் க்வாலிட்டியை பொறுத்தவரை "கிளாசிக் 350" ராயல் என்ஃபீல்டின் லேட்டஸ்ட் வரவான J-Platform இஞ்சினை கொண்டிருக்கும். ஆனால் புல்லட் 350-யில் பழைய Unit Construction Engine (UCE) டைப் இஞ்சின்தான். அதனால் அதிர்வுகளும் அதிகமாக இருக்கும். இதன் அதிர்வுகளுக்காகவும் மனதை மயக்கும் எக்ஸாஸ்ட் சத்தத்திற்காகவும் இதை இன்றும் விரும்பி வாங்குவோர் பலர். உங்களுக்கும் இந்த அதிர்வுகள் பிடிக்கும் என்றால் இப்போதே வாங்கிவிடுங்கள்.
அடுத்த தலைமுறை ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350:
அதிர்வுகள் இல்லாத புல்லட் வேண்டுமென எதிர்பார்ப்பவர்கள் சில மாதங்கள் காத்திருந்தால் புல்லட் 350-யும் ராயல் என்ஃபீல்டின் J-Platform இஞ்சினுடன் அறிமுகமாக இருக்கிறது. தீவிரமாக டெஸ்ட் செய்யப்பட்டு வரும் இந்த அடுத்த தலைமுறை புல்லட் 350-யை கூடிய சீக்கிரம் ராயல் என்ஃபீல்ட் ஷோரூம்களில் காணலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும், ஏபிபி ஆப்பிலும் பின் தொடரலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI