இந்தியாவைப் பொறுத்தமட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இ ஸ்கூட்டர்களும், இ பைக்குகளும் இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி வருகின்றனர். 

Continues below advertisement

Revolt RV1:

இ பைக் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் நிறுவனம் Revolt. இவர்களின் Revolt RV1 இ பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். 

இந்த Revolt RV1 இ பைக்கில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது.

Continues below advertisement

1. RV1 Standard - ரூபாய் 1 லட்சத்து 1 ஆயிரத்து 730

2. RV1 Standard - Titan Red Silver - ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 791

3. RV1 Plus - ரூபாய் 1 லட்சத்து 6 ஆயிரத்து 607

4. RV1 Plus - Titan Red Silver - ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரத்து 659

பேட்டரி:

முதல் இரண்டு வேரியண்ட்களில் 2.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கடைசி 2 வேரியண்ட்களில் 3.24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த Revolt RV1 இ பைக் 108 கிலோ மற்றும் 110 கிலோ எடை கொண்டது. இதை சார்ஜ் செய்வதற்கு 2.15 மணி நேரம் ஆகிறது. 3.24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட Revolt RV1 இ பைக்கிற்கு 3.3 மணி நேரம் ஆகிறது. 

160 கி.மீட்டர் மைலேஜ்:

ப்ளூடூத் இதில் உள்ளது. கருநீலம், பச்சை கருப்பு, சிவப்பு பச்சை வண்ணத்தில் உள்ளது. 2.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 3.24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ Revolt RV1 இ பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

அதிகபட்சமாக 70 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம். எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி ஐபி ரேட்டிங் ஐபி 67 ஆகும். சிபிஎஸ் ப்ரேக்கிங் சார்ஜ் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கமும், மோனோஷாக் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. 108 கிலோ எடை கொண்டது.

கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீட்டர் ஆகும். இது250 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. பேட்டரி வாரண்டி 5 வருடமும், மோட்டார் வாரண்டி 5 வருடமும் கொண்டது. 6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர்ஸ் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

வசதிகள்:

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. கில் சுவிட்ச், ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி இதில் இல்லை. எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகலிலும் எரியும் விளக்குகள் வசதி உள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் வசதி உள்ளது. சிக்னல் விளக்குகள் வசதி உள்ளது. இந்த இ பைக் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் ஓட்டுவதற்கு மிகவும் உகந்தது ஆகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI