இந்திய சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் பிரபலமான பட்ஜெட் கார்களில் ரெனால்ட் க்விட் (Renault Kwid) முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த காரை முழுத் தொகையும் கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையாளர்களுக்காக எளிமையான ஃபைனான்ஸ் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதன் முழுமையான விவரங்கள் பின்வருமாறு:

Continues below advertisement

விலை,இஎம்ஐதிட்டம்

ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 4.70 லட்சமாக உள்ளது. இதன் ஆன் ரோடு விலை தோராயமாக ரூ. 5.20 லட்சம் முதல் ரூ. 5.30 லட்சம் வரை வரும்.

காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், க்விட் காருக்கு ரூ. 80,000 தொகையை முன்பணமாகச் செலுத்தினால், மீதமுள்ள ரூ. 4.40 லட்சம் முதல் ரூ. 4.50 லட்சம் வரையிலான தொகையை வங்கிக் கடனாகப்பெற முடியும்.

Continues below advertisement

இந்த கடன் தொகைக்கு வங்கிகள் தோராயமாக 9 முதல் 9.8 சதவீத வட்டி விகிதத்தை வசூலிக்கின்றன. 5 ஆண்டுகள் (60 மாதங்கள்) கால அவகாசத்தில் இந்த கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் தோராயமாக ரூ. 9,000 முதல் ரூ. 9,500 வரை மாதத்தவணையாக செலுத்த வேண்டியிருக்கும். எனினும் வங்கிக்கு ஏற்றவாறு தொகை மாறுபடலாம்.

 இன்ஜின், மைலேஜ்எப்படி?

இந்த காரில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 68 பிஎஸ் பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் இது கிடைக்கிறது. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 21.46 கி.மீ முதல் 22.3 கி.மீ வரையிலான சிறந்த மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.

வடிவமைப்பு

க்விட் கார் ஒரு ஹேட்ச்பேக் மாடலாக இருந்தாலும், தோற்றத்தில் கவர்ச்சிகரமான மினி எஸ்யுவி போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சிறப்பான பயணத்திற்கு ஏற்ப 184 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் இடம்பெற்றுள்ளன.

உட்புற கேபினில் 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய வசதிகள் தரநிலையாக வழங்கப்பட்டுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI