டெல்லியில் கரப்பான் பூச்சி போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று  பேரணி நடத்தும்போது காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டு வீசியும் தடுத்தனர் இதில் பல மாணவர்கள் காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளானார்கள். மேலும் பாராளுமன்றத்திற்குள் நுழையவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சசென்னையில் தலைமைச்செயலகத்திற்கு பிரபல பாடகர் அறிவு இன்று காலை செல்ல முற்பட்டார்.

Continues below advertisement

கைது செய்யப்பட்ட அறிவு

அப்போது  திடீரென நீட் தேர்விற்கு எதிராக முழக்கமிட்டவர் முதலமைச்சர் விஜய் நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என முழக்கமிட தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாடகர் அறிவை சுற்றிவளைத்த போலீசார் தரதரவென கைது செய்து இழுத்து சென்றனர்.  இந்த நிலையில், இந்த தகவலை கேள்விப்பட்ட முதலமைச்சர் விஜய் பாடகர் அறிவை தனது அறைக்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அறிவு முதலமைச்சர் விஜய்யை சந்திக்க அழைத்து செல்லப்பட்டார். 

யார் இந்த அறிவு.?

அறிவு என அழைக்கப்படும் அறிவரசு கலைநேசன் பிரபல தமிழ் பாடகராவார். "என்ஜாய் எஞ்சாமி" மற்றும் "நீயே ஒலி" போன்ற சுயாதீன தனிப்பாடல்கள் மூலம் பிரபலம் பெற்றவராவார். முதலமைச்சர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடல், சார்பட்டா பரம்பரை நியே ஒலி, நட்பே துணை படத்தில் சிங்கில் பசங்க என பல பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். 

Continues below advertisement