இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது ரெனால்ட். ரெனால்ட் நிறுவனத்தின் பல கார்களும் இந்தியாவில் வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது.
Renault Kiger:
ரெனால்ட் நிறுவனம் பட்ஜெட் விலையில் தயாரித்துள்ள கார்களில் ஒன்று Renault Kiger கார். இந்த கார் சப் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஆகும். எஸ்யூவி ரக காரில் உள்ள வசதிகள் இந்த காரிலும் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.87 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 12.81 லட்சம் ஆகும்.
இந்த காரில் மொத்தம் 19 வேரியண்ட்கள் உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கில் ஓடும் வசதி கொண்டது இந்த கார். Renault Kiger 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வடிவம் வாடிக்கையாளரை கவர்கிறது. இந்த காரின் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மிகவும் சுமூகமாக வாகனத்தை இயக்க பக்கபலமாக உள்ளது.
வேரியண்ட்கள்:
Kiger Authentic MT - ரூ.6.87 லட்சம்
Kiger Authentic MT CNG - ரூ.7.67 லட்சம்
Kiger Evolution MT - ரூ.7.72 லட்சம்
Kiger Evolution AMT - ரூ.8.26 லட்சம்
Kiger Evolution MT CNG - ரூ.8.52 லட்சம்
Kiger Techno MT - ரூ.8.89 லட்சம்
Kiger Techno MT Dual Tone - ரூ.9.14 லட்சம்
Kiger Techno AMT ENERGY - ரூ.9.43 லட்சம்
Kiger Techno AMT Dual Tone - ரூ.9.67 லட்சம்
Kiger Techno MT CNG - ரூ.9.69 லட்சம்
Kiger Emotion MT - ரூ.9.91 லட்சம்
Kiger Emotion MT Dual Tone - ரூ.10.15 லட்சம்
Kiger Emotion MT CNG - ரூ.10.74 லட்சம்
Kiger Emotion Turbo MT Dual Tone - ரூ.10.81 லட்சம்
Kiger Techno Turbo CVT Dual Tone - ரூ.10.81 லட்சம்
Kiger Emotion Turbo MT - ரூ.10.81 லட்சம்
Kiger Emotion Turbo CVT - ரூ.12.81 லட்சம்
Kiger Emotion Turbo CVT Dual Tone - ரூ.12.81 லட்சம்
மைலேஜ்:
இந்த கார் 20 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. கேபினில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்தான் மலிவானதாக இருப்பதாக பயனாளர்கள் கருதுகின்றனர். இந்த Renault Kiger 71 பிஎச்பி குதிரை திறனை காெண்டது. 96 என்எம் டார்க் இழுதிறனை கொண்டது. எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய 3 மாடல்களிலும் உள்ளது.
வயர்லஸ் சார்ஜர், மல்டி வியூ கேமரா, எட்டு இன்ச் தகவல் தொடுதிரை, வென்டிலேட்டிட் இருக்கைகள் உள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. ஹில் ஸ்டார்ட் உதவிகளும் உள்ளது. ஜிஎன்சிஏபி-யில் 4 ஸ்டார் பாதுகாப்பு குறியீடு பெற்றுள்ளது. 405 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 6 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம் உள்ளது. 16 இன்ச் டூயல் டன் அலாய் சக்கரம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது.
இந்த காரின் பயனாளர்கள் இந்த காருக்கு 4.6 ஸ்டார் அளித்துள்ளனர். நிசான் மெக்னைட், ஹுண்டாய் எக்ஸ்டர், டாடா பஞ்ச், ஃப்ரான்க்ஸ் போன்ற கார்களுக்கு இந்த கார் போட்டியாக கருதப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI