Renault Duster 2026 Rival: ரெனால்ட் டஸ்டர் கார் மாடலானது கடும் போட்டி நிலவும் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

ரெனால்ட் டஸ்டர் - நெருக்கும் போட்டியாளர்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ரெனால்ட் டஸ்டரின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 3 இன்ஜின் ஆப்ஷன்களில் 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த காரின் விலை 10 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 18 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் வரையில் நீள்கிறது. டர்போ பெட்ரோல் இன்ஜின் எடிஷன்களின் விநியோகம் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து, வரும் தீபாவளி முதல் டஸ்டரின் ஹைப்ரிட் எடிஷனின் விநியோகம் தொடங்கும் என ரெனால்ட் அறிவித்துள்ளது. மிகவும் போட்டித்தன்மை மிக்க விலை வரம்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மிட்சைஸ் எஸ்யுவி ஆனது, உள்ளூர் சந்தையில் ஹுண்டாய் க்ரேட்டா, டாடா சியாரா, கியா செல்டோஸ், மாருதி சுசூகி விக்டோரிஸ் மற்றும் மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.

Continues below advertisement

டஸ்டர் Vs போட்டியாளர்கள் - எது பட்ஜெட்டில் பெஸ்ட்?

மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் க்ரேட்டாவானது, ரூ.10.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்கவிலையை கொண்டுள்ளது. இதை காட்டிலும் 30 ஆயிரம் ரூபாய் மலிவாகவே டஸ்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சியாராவின் தொடக்க விலை ரூ.11.49 லட்சம், கியா செல்டோஸ் விலை ரூ.10.99 லட்சம், மாருதி சுசூகி விக்டோரிஸ் ரூ.10.50 லட்சம் மற்றும் க்ராண்ட் விட்டாரா ரூ.10.77 லட்சம் தொடக்க விலையாக கொண்டுள்ளன. அதாவது இந்த பிரிவில் உள்ள பல நேரடி போட்டியாளர்களை காட்டிலும், டஸ்டர் எஸ்யுவி மலிவு விலையிலேயே கிடைக்கிறது. எனவே, பட்ஜெட்டில் தரமான மிட்-சைஸ் எஸ்யுவி வாங்க விரும்புவோருக்கு டஸ்டர் நல்ல தேர்வாக இருக்கும்.

டஸ்டர் Vs போட்டியாளர்கள் - மொத்த ஒப்பீடு இதோ

அம்சங்கள்ரெனால்ட் டஸ்டர்டாடா சியாராஹுண்டாய்  க்ரேட்டாகியா செல்டோஸ்மாருதி க்ராண்ட் விட்டாரா
நீளம் (மிமீ)4,3434,3404,3304,4604,345
அகலம் (மிமீ)1,8131,8411,7901,8301,795
உயரம் (மிமீ)1,6591,7151,6351,6351,645
வீல் பேஸ் (மிமீ)2,6572,7302,6102,6902,600
பூட் ஸ்பேஸ் (லிட்டர்)518622433447373
க்ரவுண்ட் க்ளியரன்ஸ் (மிமீ)212205190200210
முக்கிய இன்ஜின் ஆப்ஷன்1.3 லிட்டர் டர்போ1.5 லிட்டர் டர்போ1.5 லிட்டர் டர்போ1.5 லிட்டர் டர்போ1.5 லிட்டர் ஹைப்ரிட்
ட்ரைவ்ட்ரெயின்FWDFWDFWDFWDFWD/AWD
விலை வரம்புரூ.10.49 - 18.49 லட்சம் ரூ.11.5 - 21 லட்சம்ரூ.10.80 - 20.2 லட்சம்ரூ.11 - 20 லட்சம்ரூ.10.8 - 19.7 லட்சம்

டஸ்டர் போட்டியாளர்களை விட எப்படி சிறந்தது?

டஸ்டர் Vs க்ரேட்டா: 2026 ரெனால்ட் டஸ்டர், ஹூண்டாய் க்ரேட்டாவிற்கு ஒரு கடினமான, ஆஃப்-ரோடு திறன் கொண்ட மாற்று ஆப்ஷனாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது மேம்பட்ட கிரவுண்ட் க்ளியரன்ஸ், ஹைப்ரிட் செயல்திறன் மற்றும் அதிக பயன்பாட்டுக்கு உகந்த வடிவமைப்பு ஆகியவற்றை கொண்டு முன்னிலை பெறுகிறது.

டஸ்டர் Vs சியாரா: புதிய ரெனால்ட் டஸ்டரானது சியாராவை காட்டிலும் மிகவும் வலிமையான, ஆஃப்-ரோட் பயணத்தை மையமாகக் கொண்ட ஒரு எஸ்யூவியாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் சியாராவானது ப்ரீமியம், சொகுசு பயணத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.  1.3L டர்போ இன்ஜின் மூலம் மேம்பட்ட செயல்திறன், 1.8L ஹைப்ரிட் ஆப்ஷன் மூலம் சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் 700 லிட்டர் பூட் ஸ்பேஸ் மூலம் சியாராவிற்கு போட்டி அளிக்கிறது.

டஸ்டர் Vs செல்டோஸ்: உறுதியான வடிவமைப்பு, சிறந்த க்ரவுண்ட் க்ளியரன்ஸ், 4x4 திறன் மற்றும் அதிக இடவசதி கொண்ட காரை விரும்பினால், கியா செல்டோஸை விட புதிய செல்ரோஸ் நல்ல தேர்வாக இருக்கும். செல்டோஸ் காரானது ப்ரீமியம் மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த நகர்ப்புற ஸ்டைலிங்கில் கவனம் செலுத்துகிறது. டஸ்டர், மிகவும் உறுதியான செயல்திறனை வெளிப்படுத்தும் வடிவமைப்பை கொண்டுள்ளது.

டஸ்டர் Vs க்ராண்ட் விட்டாரா: 2026 ரெனால்ட் டஸ்டர் ஆனது அதிக செயல்திறன், பெரிய அளவீடுகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்  மற்றும் மிகவும் சக்திவாய்ந்த 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் மாருதி கிராண்ட் விட்டாராவை விட சிறந்ததாக உள்ளது. இதுபோக அதிகமான இடவசதி, 212 மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ்,  லெவல்-2 ADAS மற்றும் 18-இன்ச் வீல்கள் ஆகியவையும் டஸ்டரை சிறந்த தேர்வாக மாற்றுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI