xiomi நிறுவனத்தின் துணை நிறுவனமான  Redmi இந்தியாவில் புதிய நோட் 12 சீரிஸை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பட்ஜெட் மொபைல் பிரியர்களை வெகுவாக கொண்ட  ரெட்மி நிறுவனமானது , இந்தியாவில் விரைவில் தனது அடுத்த மிட் ரேஞ்ச் மொபைபோனை சந்தைப்படுத்தவுள்ளது . அதன்படி,  நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் சீனாவில் ஏற்கனவே அறிமுகமான நிலையில், தற்போது இந்தியாவுக்கு எப்போது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் redmi note 12 series ஸ்மார்ட்போனை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட போவதாக தெரிவித்துள்ளது. இதுவரையில் 11 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.






இருந்தாலும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் இந்த புதிய சீரிஸ் ஆனது ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் இருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவும், அதில் இருக்கும் பல அம்சங்கள் இந்த redmi note 12 series-யில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த  சீரிஸில் Note 12, Note 12 pro, note 12 pro+ உள்ளிட்ட மூன்று போன்கள் உள்ளன. இந்த  redmi note 12 series மாடல் அடுத்து ஆண்டு(2023) ஜனவரியில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது.


இந்தியாவில் எதிர்பாக்கப்படும் விலை


Redmi Note 12 Pro+ ஆனது 8GB RAM + 256GB மற்றும் 12GB RAM + 256GB உள்ளிட்ட இரண்டுவகைகளில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை CNY 2,199 (தோராயமாக ரூ.25,000) மற்றும் CNY 2,399 (தோராயமாக ரூ. 27,300) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Redmi Note 12 Pro+ ஆனது நீலம்,வெள்ளை மற்றும் கருப்பு உள்ளிட்ட வண்ணங்களில் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Redmi Note 12 Pro ஆனது 6GB RAM + 128GB வேரியண்டுடன் வருகிறது. இதன் விலை தோராயமாக ரூ.19,300, 8 GB RAM + 128 GB மெமரி வேரியண்டின் விலை தோராயமாக ரூ.20,400‘, மற்றொரு 8 GB RAM  + 256 GB மெமரி வேரியண்டின் விலை தோராயமாக ரூ.22,700 மற்றும் 12 GB RAM + 256 GB மெமரி வேரியண்டின் விலை ரூ. 24,900 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வழக்கமான Redmi Note 12 ஆனது 4GB RAM +128GB சேமிப்பு போன்ற நான்கு சேமிப்பக கட்டமைப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை /தோராயமாக ரூ. 13,600, 6GB RAM + 128GB மெமரி வேரியண்டின் விலை, தோராயமாக ரூ. 14,60, 8 GB RAM +128 GB மெமரி வேரியண்டின் விலை தோராயமாக ரூ. 17,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI