இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனம் பஜாஜ். இந்தியாவில் பஜாஜின் ஏாளமான இரு சக்கர வாகனங்கள் வெற்றிகரமான மாடலாக அமைந்துள்ளது. குறிப்பாக, பஜாஜ் இருக்க சக்கர வாகன தயாரிப்பில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது Bajaj Pulsar ஆகும். 

Continues below advertisement

பஜாஜ் பல்சரில் Bajaj Pulsar N160 இரு சக்கர வாகனத்தின் விலை, வேரியண்ட், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

1. Pulsar N160 Single Seat Twin Disc:

இந்த Pulsar N160 Single Seat Twin Disc பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 43 ஆயிரத்து 460 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் உள்ளது. இதன் எடை 148 கிலோ ஆகும். இதில் மொபைல் கனெக்ஷன், ஜிபிஎஸ் - நேவிகேஷன் வசதிகள் இல்லை. இந்த இரு சக்கர வாகனம் சிவப்பு, கருப்பு, வெண்சாம்பல் நிறங்களில் உள்ளது. 

Continues below advertisement

2. Pulsar N160 Dual Channel ABS:

இந்த Pulsar N160 Dual Channel ABS டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் கொண்டது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரத்து 241 ஆகும். இதன் எடை 154 கிலோ ஆகும். இதில் ப்ளூடூத் வசதி உள்ளது. நேவிகேஷன் வசதி உள்ளது. கருப்பு உள்பட 3 வண்ணங்களில் இந்த பைக் உள்ளது. 

3. Pulsar N160 Single Seat - USD Forks:

இந்த Pulsar N160 Single Seat - USD Forks பைக் ஆஃப் ரோட்களிலும் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 152 கிலோ ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. நேவிகேஷன் வசதி உள்ளது. கருப்பு உள்பட 4 வண்ணங்களில் இந்த பைக் உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரத்து 987.

4. Pulsar N160 USD Forks:

இந்த Pulsar N160 USD Forks பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 58 ஆயிரத்து 460 ஆகும். டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் கொண்டது. ஆஃப் ரோடிலும் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பைக் இதுவாகும். ப்ளூடூத் வசதி கொண்டது. நேவிகேஷன் வசதி உள்ளது. கருப்பு உள்பட 4 வண்ணங்களில் இந்த பைக் உள்ளது. 

ஒவ்வொரு மாதத்திற்கு ஏற்ப இந்த பைக்குகளுக்கு தள்ளுபடியும் அளிக்கப்படுவது வழக்கம். 5 கியர்கள் கொண்டது இந்த பைக் ஆகும். 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது. லிட்டருக்கு 51.6 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இதில் 164.82 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒற்றை சிலிண்டர், ஆயில் கூல்ட் எஞ்ஜினாக இது உள்ளது. 15.7 பிஎச்பி குதிரை ஆற்றலும், 14.65 என்எம் டார்க் இழுதிறன் கொண்ட காராகவும் இது உள்ளது. 

சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இந்த பைக் டிவிஎஸ் அபேச் ஆர்டிஆர் 160 4வி, சுசுகி கிக்ஸர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. இந்த பைக்கின் டேங்க் நிரப்பப்பட்டு ஓட்டினால் 722 கிலோ மீட்டர் வரை  செல்லலாம்.  இளைஞர்களை கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பைக் ஆகும். 

நெடுஞ்சாலைகளில் செல்வதற்கு நல்ல பைக் ஆகும். அதேபோல, நகர்ப்புறங்களிலும் ஓட்டுவதற்கு ஏற்ற வாகனம் ஆகும். பெண்கள் மற்றும் முதியவர்கள் ஓட்டுவதற்கு சற்று சிரமமாக இந்த பைக் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI