சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால கரியரில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படமாக அமைந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தின் இயக்குநர் பொன்ராம் படம் குறித்த புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கதையை 12 நடிகர்களிடம் சொன்னதாகவும் அத்தனை பேரும் படத்தில் நடிக்க மறுத்ததாகவும் அவர் கூறியுள்ளார் . இந்த தகவல் பலரும் இதுவரை அறியாத ஒன்று

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கவனமீர்த்த சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கரியரின் ஆரம்ப காலத்தில் காமெடியான சப்ஜெட்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த வகையில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் எஸ்.கே நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் மற்றும் சீம ராஜா ஆகிய மூன்று படங்கள் அவருக்கு தொடர் வெற்றிகளை கொடுத்தன. குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அவரை பெருசு முதல் சிறுசு வரை கொண்டு சேர்த்தது. அண்மையில் கொம்புசீவி படத்தின் ப்ரோமோஷனின் போது வருத்தப்பட்டாத வாலிபர் சங்கம் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் பொன்ராம் பகிர்ந்துகொண்டார்

12 பேர் ரிஜெட்க் செய்த கதை

" வருத்தப்பட்டாத வாலிபர் சங்கம் படத்தின் கதையை 12 பேருக்கு மேல் சொல்லியிருக்கேன். சிவா சார் என்னை காலை 7 மணிக்கு வந்து கதை சொல்ல சொன்னார். கொஞ்ச நேரம் கதை கேட்டதும் இந்த படத்தை நாம் பண்ணலாம் என்று சொன்னார். ஒரு இயக்குநராக எனக்கு ஒரு நல்ல துவக்கத்தை கொடுத்தவர் அவர்தான். அவருக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். என் வாழ்க்கை தொடங்கியதே அங்கிருந்துதான். தானும் வளர்ந்து என்னை தூக்கி விட்டார் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவரும் சூரியும் சேர்ந்து டெவலப் செய்தது அற்புதமாக இருந்தது" என பொன்ராம் கூறியுள்ளார். 

Continues below advertisement

பராசக்தி

சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். ரவி மோகன் , அதர்வா , ஶ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார் . டான் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கலுக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை Zee5 நிறுவனம் வாங்கியுள்ளது .