பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்செடிஸ் பென்ஸ் இந்தியாவில் தனது தயாரிப்பை தொடங்கி இருக்கிறது.


மக்களை வாய் பிளந்து பார்க்க வைக்கும் சொகுசுக் கார் நிறுவனமான பென்சின் எஸ் கிளாஸ் வகை கார்கள் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய வகை எஸ் கிளாஸ் வகை கார், பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.


பென்ஸ் எஸ் கிளாஸ் கார்களின் சி.பி.யு வெர்சன் குறுகிய காலத்தில் விற்பனை செய்யப்பட்ட ஒன்றாகும். இந்த நிலையில், இந்த சி.பி.யு. வெர்சன் எஸ் கிளாஸ் கார்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளது பென்ஸ் நிறுவனம். இதில் கூடுதல் ஆச்சரியம் என்ன என்றால் இந்தியாவில் மேட் இன் இந்தியா முத்திரையுடன் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ் கிராஸ் சி.பு.யு. கார் மாடல்களின் விலையையும் பென்ஸ் நிறுவனம் குறைத்து உள்ளது.



அதன்படி எஸ் 350 டி வகை கார்களின் விலை ரூ.1.57 கோடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. எஸ் 450 4 மேடிக் வகை கார்களின் விலை ரூ.1.62 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கார்களில் பல்வேறு புதிய வசதிகளை பென்ஸ் நிறுவனம் கொண்டு வர உள்ளது. ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், ப்ரீ-சேஃப் ப்ளஸ், ப்ரீ-சேஃப் இம்பல்ஸ் சைட், ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட், ஆக்டிவ் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆக்டிவ் ஸ்டீயரிங் அசிஸ்ட், எவாசிவ் ஸ்டீயரிங் அசிஸ்ட், ஆக்டிவ் டிஸ்டன்ஸ் அசிஸ்ட் டிஸ்ட்ரோனிக் அண்ட் அட்டென்ஷன் அசிஸ்ட் போன்ற தொழில்நுட்பங்கள் இதில் கூடுதலாக இடம்பெற உள்ளன.



அதே போல் டிஜிட்டல் விளக்குகள், தொடுதிரை வசதி கொண்ட டிஸ்பிளே உதவியுடன் காரின் பல்வேறு வசதிகளை பயன்படுத்துவது, மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர் வசதி, Burmester 3D, கைரேகை பாதுகாப்பு வசதி, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண்பதற்கான திரை, MBUX infotainment system, போன்ற எண்ணிலடங்கா வசதிகளுடன் வருகிறது பென்ஸ் எஸ் பிளஸ் கார்.


பின்புற திரை பொழுதுபோக்கு அமைப்பு, பின்புற மசாஜ் இருக்கைகள், ஆட்டோமேடிக் கைபிடிகளை கொண்ட கதவகள், MBUX இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கட்டுப்படுத்துவதற்கான பின்புற டேப்லெட், மூன்று நிறங்களை தோல் சீட்டுகள், நகர்த்தக் கூடிய முன் இருக்கைகள், 64 வண்ண சுற்றுப்புற விளக்குகள் என கண்ணை கவரும் வசதிகளை பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் இந்த எஸ் கிளாஸ் காரில் அறிமுகம் செய்து இருக்கிறது. 6 சிலிண்டர்களை கொண்ட டீசல் மற்றும் பெட்ரோல் எஞ்சின்களை கொண்ட கார்கள் தயாரிக்கப்படுகின்றன.


 


 


Car loan Information:

Calculate Car Loan EMI