Maruti Ciaz Discontinued: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது கடைசி காலத்திலும் சியாஸ் கார் மாடல் விற்பனையில் அசத்தியுள்ளது.

கடைசி காலத்தில் விற்பனையில் அசத்தும் சியாஸ்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெகுஜன வாகன பிரிவில், மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறைந்த விலை, எளிய பராமரிப்பு ஆகியவை, இந்நிறுவன கார்களை மக்கள் அதிகளவில் வாங்க பிரதான காரணங்களாக உள்ளன. இந்நிலையில் தான், மாருதியின் ப்ரீமியம் செடான் கார் மாடலான சியாஸின் உற்பத்தி கடந்த மார்ச் மாதத்துடன் கைவிடப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள கடைசி யூனிட்களின் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் கூட, ஹோண்டாய் நிறுவனத்தின் பிரபல கார் மாடலான சிட்டியை விற்பனையில் சியாஸ் வீழ்த்தி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்: Maruti Car Price: நல்லதும் பண்றிங்க, கெட்டதும் பண்றிங்க.. 2 கார்களின் விலையை உயர்த்திய மாருதி - ஏன்? எவ்வளவு?

முடிவை மறுபரிசீலனை செய்யுமா மாருதி?

கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் சியாஸின் ஆயிரத்து 28 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதே காலகட்டத்தில், அதன் போட்டியாளர்களான ஹுண்டாய் வெர்னாவின் 813 யூனிட்களும், ஹோண்டா சிட்டியின் 790 யூனிட்களும் (ஹைப்ரிட் எடிஷன் உட்பட) மட்டுமே விற்பனையாகியுள்ளன. இந்த செக்மெண்டில் ஃபோல்க்ஸ்வாகன் விர்ட்டஸ் மட்டுமே சியாஸிற்கு மேலாக விற்பனையை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய யூனிட்களின் விநியோகம் கடந்த ஏப்ரல் மாதமே நிறுத்தப்பட்டாலும், விற்பனையில் தொடர்ந்து அசத்துவதால் சியாஸ் காரை கைவிடும் முடிவை மாருதி மறுபரீசிலனை செய்யுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சியாஸின் 10 ஆண்டுகால பயணம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டா சிட்டியின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் நோக்கில், கடந்த 2014ம் ஆண்டு சியாஸ் கார் மாடல் சந்தைப்படுத்தப்பட்டது. கூடுதலாக ஹுண்டாய் வெர்னா, ஃபோல்க்ஸ்வாகன் வெண்டோ, ஸ்கோடா ரேபிட், நிஸான் சன்னி ஆகிய கார் மாடல்களிடமிருந்தும் போட்டியை எதிர்கொண்டது. ஆனால், காலப்போக்கில் விற்பனை சரிந்தது மற்றும் பொதுமக்களில் எதிர்பார்ப்பு மாறியிருப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சியாஸ் உற்பத்தியை மாருதி சுசூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் லேசான பேஸ்லிஃப்ட் செய்யப்பட்டு, லேசான சில கூடுதல் அம்சங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இதே 10 ஆண்டுகால கட்டத்தில் ஹோண்டா சிட்டி காரானது 2 தலைமுறை மாற்றங்களையும், 4 மாடல் மாற்றங்களையும் கண்டுள்ளது. இதன் விளைவாகவும் சியாஸின் விற்பனை கடுமையாக சரிந்தது.

சியாஸ் - மாருதியின் எதிர்கால திட்டம்:

முன்னதாக, கடந்த 1998ம் ஆண்டு ஹோண்டா சிட்டி காரை எதிர்கொள்வதற்காக பலேனோ கார் மாடலை மாருதி சுசூகி அறிமுகப்படுத்தியது. ஆனால், சந்தையில் பெரும் வரவேற்பை பெற தவறியதால், அந்த செடானின் உற்பத்தி 2007ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஆனால், அந்த காரானது 2015ம் ஆண்டு பிரீமியம் ஹேட்ச்பேக்காக கடந்த 2015ம் ஆண்டு ரி-எண்ட்ரி கொடுத்தது. விற்பனையிலும் தொடர்ந்து அசத்தி வருகிறது. அதன்படி, ”கார்களின் ஆன்மா என்பது அப்படியே தான் இருக்கும். அதன் உடலமைப்பு மட்டுமே காலத்திற்கு ஏற்ப மாறுபடும். அதற்கான உதாரணம் தான் பலேனோ. அதே வரிசையில் சியாஸ் கார் மாடலும் அப்கிரேட் செய்யப்பட்டு வேறு வடிவத்தில் சந்தைப்படுத்தப்படும்” என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 சியாஸ் காரில் உள்ள அம்சங்கள்

சியாஸ் காரில் கீலெஸ் எண்ட்ரி, லெதர் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, ரியர் ஏசி வெண்ட்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது 103bhp மற்றும் 138Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 4 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. இதன் விலை 10 லட்சத்து 95 ஆயிரத்தில் தொடங்கி 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 பேர் அமரும் வகையிலான இடவசதி கொண்ட சியாஸ் காரானது, 7 வேரியண்ட்களில் சந்தையில் கிடைக்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI