ஒலா நிறுவனத்தின் மலிவு விலை மின்சார ஸ்கூட்டரை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


ஓலா  S1X நிறுவனம்:


அதிகரித்து வரும் தேவைகளின் அடிப்படையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், மின்சார வாகனங்களின் அறிமுகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் ஓலா நிறுவனம் தவிர்க்க முடியாததாக உள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் 17 ஆயிரத்து 579 யூனிட்களை விற்று, தொடர்ந்து நாட்டின் முன்னணி மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியாளராக திகழ்ந்து வருகிறது. அண்மையில் தான் வெறும் ரூ.1.10 லட்சம் மதிப்பில் S1 ஏர் எனும் மின்சார ஸ்கூட்டர் மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஓலா சார்பில் இந்திய சந்தையில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர் எனும் பெருமையுடன் அந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தான், S1 ஏர் மாடலை காட்டிலும் மிகக் குறைந்த விலையிலான, புதிய S1X மாடல் மின்சார ஸ்கூட்டர்களை இந்திய  சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.


S1X மின்சார ஸ்கூட்டர் விலை விவரங்கள்:


தங்கள் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலாக S1X எனும் மின்சார ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் வடிவமைத்து உள்ளது.  S1X (2 கிலோவாட் ஹவர்), S1X மற்றும் S1X பிளஸ் என மூன்று வேரியன்ட்களில்  இந்த ஸ்கூட்டர் கிடைக்கின்றன. குறைந்தபட்சமாக ஒலா S1X (2 கிலோவாட் ஹவர்) எனும் பேஸ் வேரியண்டின் விலை ரூ. 79, 999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு அந்த விலை  ரூ. 89, 999 ஆக உயர்த்தப்படும்.



  • ஒலா S1X (2 கிலோவாட் ஹவர்) விலை ரூ. 89, 999

  • ஒலா S1X (3 கிலோவாட் ஹவர்) விலை ரூ.99, 999

  • ஒலா S1X (4 கிலோவாட் ஹவர்) விலை ரூ.1 லட்சத்து 09 ஆயிரத்து 999


புதிய ஸ்கூட்டர் அறிமுகம் காரணமாக ஒலா S1 ஏர் விலை தற்போது ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது.


பேட்டரி விவரங்கள்:


ஒலா S1X பேஸ் வேரியன்டில் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், மிட்-ரேன்ஜ் மற்றும் பிளஸ் வேரியன்ட்களில் முறையே 3 மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றின் அம்சங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த மாடல் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 


சிறப்பம்சங்கள்:


டிசைனிங்கை பொருத்தவரை ஒலா S1X மாடல் தோற்றத்தில் S1 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய S1X ஹார்டுவேர் அம்சங்களும் அதன் S1 ஸ்கூட்டர்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளன. அந்த வைகயில், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.  இதன் முகப்பு கவர் மட்டும் சற்று பெரியதாக காட்சியளிக்கின்றன. இத்துடன் டுவின் எல்.ஈ.டி. ப்ரோஜெக்டர்கள் மற்றும் இதனை சுற்றி எல்.ஈ.டி. பெசல்கள் உள்ளன. இத்துடன் ஃபிளாட் ஃபுளோர்-போர்டு வழங்கப்பட்டு உள்ளன. இதன் ஹேன்டில்பார் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட மிரர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல் டூ-டோன் பெயின்ட் ஆப்ஷனில் கிடைக்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI