பிரபல ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு S1 மற்றும் S1  Pro  என்ற இரண்டு ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தியது. குறைவான விலையில் அறிமுகமான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்பதற்காக பலரும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறனர். ஆனாலும் விற்பனைக்கு வரும் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடுவதால் ஓலா ஸ்கூட்டர் வாங்குவதே பலருக்கும் சவாலாக இருக்கிறது. ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் முன்பதிவு செய்தவர்களே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏனென்றால் ஸ்கூட்டருக்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை ஓலாவே எதிர்பார்த்திருக்கவில்லை போலும். தற்காலிகமாக தனது விற்பனையை நிறுத்தி வைத்திருந்த ஓலா ஸ்கூட்டர் நிறுவனம் வருகிற மார்ச் 17 தேதி மீண்டும் தனது  விற்பனையை துவங்க உள்ளது. 







புதிதாக ஸ்கூட்டர் வாங்க  விரும்பும் நபர்கள்  மார்ச் மாதம் 17 ஆம் தேதி முன்பதிவு செய்துக்கொள்ளலாம். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. புதிய வாடிக்கையாளர் அடுத்த நாளே ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் ஆடர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் ஸ்கூட்டி டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. . விரைவில் சந்தைப்படுத்தவுள்ள தங்கள் S1  Pro  ஸ்கூட்டர் வகைகளில் புதிய நிறத்தினையும் ஓலா அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு 'ஜெருவா' (Gerua)  என்னும் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.






மும்பை போன்ற பெருநகரங்களில் இருப்பவர்கள் ஓலா ஆப் மூலம் இந்த ஸ்கூட்டரை ஆடர் செய்துக்கொள்ளலாம். மற்றவர்கள் இணையதளம் வாயிலாக ஆடர் செய்ய வேண்டும்.  ஓசூரில் உள்ள ஓலா ஃபியூச்சர் ஃபேக்டரியில்தான் தற்போதையை ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.ஓலா எஸ்1 ப்ரோ ஆகஸ்ட் மாதம் ரூ. 1,29,999 விற்பனை செய்ப்பட்டது. இருப்பினும், பல்வேறு இந்திய மாநிலங்களில் மின்சார வாகனங்களுக்காக பெறும் மானியங்களைப் பொறுத்து இந்த விலை மாறுபடும். இவ்வவகை ஸ்கூட்டர்கள் பத்து வெவ்வேறு வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI