பிரபல ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு எலக்டிரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. அந்த ஸ்கூட்டர் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பலரும் அந்த ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்தனர். இந்தச் சூழலில் கடந்த 26ஆம் தேதி ஓலா எஸ் 1 ப்ரோ எல்கடிரிக் ஸ்கூட்டர் புனேவில் தீ பிடித்ததாக புகார் எழுந்தது. 


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஓலா நிறுவனம் சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியானது. அதில், “எங்களுடைய நிறுவனத்தின் எலக்டிரிக் ஸ்கூட்டர் ஒன்று தீ பிடித்த சம்பவம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஒரு விரிவான விசாரணைக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். எப்போதும் வாடிக்கையாளர்களின் நலனில் எங்களுக்கு அக்கறை உள்ளது. ஆகவே இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதாக தெளிவாக ஆராய்ந்து நாங்கள் முழு விவரங்களையும் விரைவில் வெளியிடுவோம்.


இந்த விபத்திற்கான மூல காரணம் என்ன என்பது தொடர்பாகவும் எங்களுடைய குழு விசாரிக்க உள்ளது. எனவே இந்த விவகாரத்தை நாங்கள் எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. அதில் ஒரு கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓலா ஸ்கூட்டர் திடீரென்று தீ பிடிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது என்று விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக ஓலா நிறுவனம் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது. இந்த தீ விபத்திற்கு ஓலா ஸ்கூட்டரில் உள்ள லித்தியம் ஐயான் பேட்டரியில் வெப்பம் காரணமாக தீ பிடித்திருக்க வாய்ப்பு உண்டாகியிருக்கும் என்று கருதப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


Car loan Information:

Calculate Car Loan EMI